• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • NewEducationPolicy2020 | உயர்கல்வியில் புதிய கல்விக்கொள்கை பற்றிய கருத்துக்களை தெரிவிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு..

NewEducationPolicy2020 | உயர்கல்வியில் புதிய கல்விக்கொள்கை பற்றிய கருத்துக்களை தெரிவிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு..

கோப்புப் படம்

கோப்புப் படம்

புதிய கல்வி கொள்கை தொடர்பாக கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.

  • Share this:
    புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதை அடுத்து, பொதுமக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உயர்கல்வி சார்ந்த புதிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்துக்களை தெரிவிக்க, வரும் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.

    மேலும் படிக்க.. ஓபிசி இடஒதுக்கீடு மறுப்பு - தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்..



    இதுதொடர்பாக அனைத்து மாநில பல்கலைக்கழகங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தங்கள் நிறுவனங்கள் சார்ந்த இணையதள பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டு பொதுமக்களின் கருத்துக்களை பெறலாம் எனவும், பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.

    புதிய கல்வி கொள்கை தொடர்பாக கருத்து தெரிவிக்க

    innovateindia.mygov.in என்ற முகவரியில் கருத்து தெரிவிக்கலாம்

    innovateindia.nep2020-citizen -ல் கருத்தை பதிவு செய்யலாம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: