பொறியியல் பொதுப்பரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடக்கம்!

ஆன்லைன் கலந்தாய்வு 4 சுற்றுக்களாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொறியியல் பொதுப்பரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடக்கம்!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: July 3, 2019, 8:15 AM IST
  • Share this:
பொறியியல் சேர்க்கைக்கான பொதுப்பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கியது. சிறப்பு பிரிவு, தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில், இன்று பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.

இந்த கலந்தாய்வில், ஒன்று முதல் 9, 872 வரை ரேங்க பெற்ற மாணவர்கள், வீட்டிலிருந்த படியோ அல்லது தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 46 மையங்களுக்குச் சென்றோ பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


anna university, அண்ணா பல்கலைக் கழகம்,
அண்ணா பல்கலைக்கழகம்


மேலும் இந்த ஆன்லைன் கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் சுற்றில் இடங்களைத் தேர்வு செய்ய இன்று முதல் 10-ம் தேதி வரை மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 11-ம் தேதி மாணவர்களுக்கான சீட் ஒதுக்கீடு செய்யப்படும். அந்த கல்லூரிகளில் சேருவதை மாணவர்கள் ஜூலை 12-ம் தேதிக்குள் உறுதிபடுத்த வேண்டும். ஜூலை 13-ம் தேதி இறுதி சீட் ஒதுக்கீடு செய்யப்படும். அதில் கல்லூரியைத் தேர்வு செய்யாத மாணவர்கள் அடுத்த சுற்று கலந்தாய்வில் பங்கேற்கலாம்.மேலும் இன்று தொடங்கும் இந்த பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு வருகிற 28-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவக் கலந்தாய்வுக்கு முன்னதாக, பொறியியல் கலந்தாய்வு நடைபெறுவதால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க... கேரளாவில் உற்சாகமாக கால்பந்து விளையாடிய பசுமாடு!

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading