Foreign Education | வெளிநாட்டில் கல்வி பயில வேண்டுமா? அனைத்து விவரங்களையும் வழங்கும் அரசின் ஒரே இணையதளம் விரைவில்

மாதிரிப்படம்.

வெளிநாடுகளில் படிக்க ஆசையா? உங்களுக்குத் தெரிய வேண்டிய விவரங்கள் என்னவெனில் எந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் சிறந்தவை? அவை அங்கீகரிக்கப்பட்டவையா? இதற்கான கல்வி உதவித்தொகை இருக்கிறதா? கல்விக்கடன் மற்றும் மருத்துவக் காப்பீட்டு என்னென்ன? நீங்கள் தேர்வு செய்யும் நாட்டின் அரசியல், பொருளாதார சூழ்நிலைகள் ஆகிய அடிப்படை விவரங்கள் அவசியம்.

  • Share this:
    வெளிநாட்டில் கல்வி கற்க ஆவலாக இருக்கும் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ஏகப்பட்ட கேள்விகள் சந்தேகங்கள் இது தொடர்பாக எழுவது நியாயமே. இந்த சந்தேகங்களையும் கேள்விகளையும் தீர்க்கவே இந்த ஆண்டில் இந்திய அரசு Global Indian Students Portal (GISP) என்ற ‘நம்பகமான மற்றும் ஒரே இடத்தில் அனைத்து தகவல்களும் நிரம்பிய’ சேவை தளத்தைத் தொடங்குகிறது.

    இந்த புதிய தகவல் சேவை இணையதளத்தின் செயல்பாட்டு விவரங்களுடன் ஒப்பந்தப் புள்ளி ஆவணத்தை வெளியிட்டுள்ளது. அதனை நியூஸ் 18 செய்தி ஊடகம் சீராய்வு செய்தது.

    அதன் விவரம் வருமாறு:

    மாணவர்கள் பதிவு செய்ய பெட்டகம் ஒன்றை வழங்குகிறது. மேலும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் அங்கு வழங்கப்படும் பாடநெறிகள், கல்வி நிறுவனங்களுக்கான இணைப்புகள் ஆகிய தகவல்களை வழங்கும். இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டு ஜூலையில் இறுதி செய்யப்பட்டு உடனடியாக வழங்கப்படவுள்ளன

    மிக முக்கியமாக ஒரு குறிப்பிட்ட கல்வி நிறுவனத்துக்கு இணையான கல்வி நிறுவனம் இருக்கிறதா என்ற விவரமும் அதற்கு அந்தக் குறிப்பிட்ட நாட்டில் அங்கீகாரம் உள்ளதா என்ற விவரமும் வழங்கப்படுகிரது. இதற்காக நிறுவப்பட்ட இணையதளத்தில் இணைப்புகள் கல்வி நிறுவனம் உள்ள நாட்டில் உருவாக்கப்படும். இணையதளத்தில் வெளிநாட்டில் உள்ள இந்திய தூதரகத்துக்கான, உதவி மையங்கள் பற்றிய இணைப்புகளில் மாணவர்கள் வெளிநாட்டில் தொடர்பு கொள்ள வேண்டிய தூதர் குறித்த விவரங்கள் ஆகியவையும் வழங்கப்படும்.

    இதைவிட வெளிநாடுகளில் சென்று கல்வி கற்க விரும்புவோருக்கு இருக்கும் பெரிய கேள்வி என்ன கல்வி உதவித்தொகை கிடைக்கும் அதாவது ஸ்காலர்ஷிப் உண்டா என்பதே அந்த கேள்வி. மேலும் மருத்துவக் காப்பீடு, கல்விக் கடன் மற்றும் வாழ்விடச் சூழ்நிலைகள் ஆகியவற்றை தெரிந்து கொள்வது அவசியம். இந்நிலையில் இந்த குளோபல் இந்திய மாணவர்கள் தளம் (GISP) அரசு மற்றும் தனியார் ஸ்காலர்ஷிப் விவரங்களையும் வழங்கும். வெளிநாட்டில் கல்வி கற்க கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான இணைப்புகளை வழங்கும். மேலும் இந்த இணையதளம் வழங்கும் தரவுகளை வங்கிகளும் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட வெளிநாட்டு கல்வி நிறுவனங்கங்களின் உண்மைத் தன்மையையும் மதிப்பிட்டுக் கொள்ளலாம். அதே போல் மருத்துவக் காப்பீடு வழங்கும் ஏஜென்சிகளின் விவரங்களும் வழங்கப்படும்.

    பரந்துபட்ட விவரங்களை அளிக்கும்:

    மாணவர்கள் செல்ல விரும்பும் நாடுகள் பற்றிய பரந்துபட்ட விவரங்களையும் ஜிஐஎஸ்பி இணையதளம் வழங்கும். அதாவது பல்வேறு நாடுகளின் அரசியல் சமுதாய, பொருளாதார சூழ்நிலைகள், ஏற்கெனவே அந்த நாடுகளில் படித்து வரும் மாணவர்கள் எண்ணிக்கை ஆகியவற்றையும் வழங்கும். குறிப்பிட்ட நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், நிலவரங்களும் சமூக-அரசியல் மற்றும் வாழ்நிலை சூழல்கள் ஆகியவற்றோடு மொழி விவகாரம், அந்த நாட்டில் கிடைக்கும் பிரதான உணவுகள் ஆகியவையும் வெளியிடபடும். விவரங்களுக்கான பதில்களுக்காக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொகுப்பும் உருவாக்கப்படும்.

    அரசு இந்த விவரங்களை அளிக்கும் தடையற்ற நன்கு வடிவமைக்கப்பட்ட இணையதளத்தை எதிர்நோக்குகிறது. அதாவது இது விவரங்களைத் தேடும் மாணவர்கள் மற்றும் பிறரை கவர்ந்திழுக்கும் விதமாக இருக்க வேண்டும், மற்றும் முக்கியமாக உயர் பாதுகாப்புடன் அமைய வேண்டும். இந்த இணையதளம் NIC பிளாட்பார்மில் இந்திய வெளியுறவு அமைச்சக வெப்சைட்டே நடத்தக் கூடியதாகவே இருக்கும். இணையதள பாதுகாப்புக்கான அரசின் தரநிலைகள் இதில் பராமரிக்கப்படும்.

    உலக இந்திய மாணவர்கள் தளத்தின் (GISP)அவசியம்

    அயல்நாடுகளில் சுமார் 11 லட்சம் இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் போலி அயல்நாட்டு பல்கலைக் கழகங்களில் போய்ச்சேர்ந்து விடும் சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. அதாவது அந்த குறிப்பிட்ட நாட்டின் அங்கீகாரம் அனுமதியில்லாமல் நடத்தப்படும் இந்தப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து விடும் அவலமும் இருந்து வருகிறது

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வெளிநாட்டில் உள்ள இந்திய தூதரகம் போலி பல்கலைக் கழகங்கள் பட்டியலை வெளியிட்டு எச்சரித்தும் வருகின்றன, மேலும் உண்மையான, அங்கீகாரம் பெற்ற பல்கலைக் கழகங்களின் பட்டியலையும் அவை வெளியிட்டு மாணவர்களுக்கு உதவுகின்றன. தூதரக அதிகாரிகள், அலுவலர்கள் வெளிநாடுகளில் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளுக்குச் சென்று இந்திய மாணவர்களின் பிரச்னைகளையும் கேட்டறிந்து வருகின்றனர்.

    உலக இந்திய மாணவர்கள் தளம் இப்போது இந்த தகவல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் தருகிறது. மத்திய வெளியுறவு அமைச்சகம் இது தொடர்பாக கல்வி அமைச்சகம், சுகாதார அமைச்சகம், இந்திய மருத்துவக் கவுன்சில், இந்தியப் பல்கலைக் கழகங்களின் கூட்டமைப்பு மற்றும் யுஜிசி ஆகியவற்றுடனும் ஆலோசனை மேற்கொண்டு இந்த இணையதளத்தைக் கட்டமைக்கிறது.

    முன்னதாக 2015ம் ஆண்டு வெளிநாடு செல்லும் மாணவர்களுக்காக ‘மாணவர்கள் ரெஜிஸ்ட்ரேஷன் பெட்டகம்’ என்பதை உருவாக்கியது. இப்போது அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் பெறுமாறு பெரிய வெளிநாட்டு கல்விக்கான இணையதளத்தை உருவாக்கி வருகிறது.
    Published by:Muthukumar
    First published: