12ஆம் வகுப்பு வேதியியல் பாடத்தில் கூடுதலாக 3 மதிப்பெண்கள் : தேர்வுத்துறை அறிவிப்பு
12ம் வகுப்பு வேதியியல் பாடத்தில் மாணவர்களுக்கு கூடுதலாக 3 மதிப்பெண் வழங்க விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

(கோப்புப் படம்)
- News18 Tamil
- Last Updated: May 28, 2020, 12:59 PM IST
வேதியியல் தேர்வில் புரதங்கள் மற்றும் குளோபுலார் புரதங்கள் என்ற தலைப்பில் 31-வது கேள்வியாக கேட்கப்பட்ட கேள்விக்கு மாணவர்கள் பதிலளித்திருந்தால் அவர்களுக்கு 3 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு மார்ச் 24-ஆம் தேதி முடிவடைந்த நிலையில் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்று சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் தொடங்கியது. இந்த பணியில் 43 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு வேதியியல் தேர்வில் 31-வது கேள்வியாக கேட்கப்பட்ட கேள்விக்கு மாணவர்கள் பதிலளித்திருந்தால் அவர்களுக்கு 3 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இதே போன்று வேறு பாடங்களிலும் ஏதாவது தவறு இருந்தால் அதற்குரிய கூடுதல் மதிப்பெண்களும் வழங்கப்படும் என்று அனைத்து கேள்விகளையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டு இருப்பதாகவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
மொழிபெயர்ப்பில் பிழை இருந்ததால் அந்தக் கேள்விக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க தற்போது அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also see...தொடர்ந்து பரவும் கொரோனா தொற்று: மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்க இருக்கிறதா ஊரடங்கு?