12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்திவைப்பு...!

12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்திவைப்பு...!
மாதிரி படம்
  • Share this:
12-ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் 2-ம் தேதி துவங்கிய பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 24-ம் தேதி முடிவடைந்தது. முன்னதாக ஏப்ரல் 24-ம் தேதி 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 31-ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது அதனையடுத்து ஏப்ரல் 7-ம் தேதியன்று 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் 8 லட்சத்திற்கு அதிகமான மாணவர்கள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...
First published: April 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading