Home /News /education /

தொழிற்கல்விகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து விவகாரம்... அனந்த கிருஷ்ணன் குழுவின் பரிந்துரை என்ன?

தொழிற்கல்விகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து விவகாரம்... அனந்த கிருஷ்ணன் குழுவின் பரிந்துரை என்ன?

நீட் விலக்கு மசோதா நிரகரிப்பு

நீட் விலக்கு மசோதா நிரகரிப்பு

ஒரு பாடத்திட்டத்தின் அடிப்படையில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டால் மற்ற பாடத்திட்டங்களில் பயின்ற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என அனந்த கிருஷ்ணன் குழு கூறியது.

    மறைந்த முன்னாள் துணை வேந்தர் டாக்டர் அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவின் பரிந்துரையின் படியே, தொழிற்கல்விகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் கூறியுள்ளார். அனந்தகிருஷ்ணன் குழுவின் பரிந்துரை என்ன என்பதை இப்போது காணலாம்

    2005- ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த அதிமுக, தொழிற்கல்விகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்துவிட்டு, பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

    இதையும் படிங்க : கொரோனா ஊரடங்கில் படித்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறதா? நிபுணர்கள் சொல்வது என்ன?

    இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அரசின் உத்தரவுக்கு தடை விதித்தது. 2006- ஆம் ஆண்டு ஆட்சியில் அமர்ந்த திமுக தலைவர் கருணாநிதி, பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்கான பரிந்துரைகளை அளிக்க முன்னாள் துணைவேந்தர் டாக்டர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் குழு அமைத்தார்.  இக்குழு 390 பேரின் கருத்துக்களை நேரடியாக கேட்டது.  மேலும் 3000 பேர் தங்களின் கருத்துக்களை எழுத்து வடிவத்தில் தெரிவித்திருந்தனர். இதில் 600 பேர் பொது நுழைவுத் தேர்வு அவசியம் என கூறியிருந்தனர்.

    பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பொது நுழைவுத் தேர்வில் மாணவர்களின் செயல்பாடு குறித்தும் அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழு ஆராய்ந்தது.

    பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியவர்களின் வாதங்களை ஏற்றுக்கொண்ட ஆனந்தகிருஷ்ணன் கமிட்டி தேர்வுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் எழுப்பிய பிரச்சினைகளில் ஒன்றைத் தீர்க்க முயன்றது. வெவ்வேறு பாடத்திட்டங்களை சேர்ந்த மாணவர்களின் மதிப்பெண்கள் ஒப்பிடத்தக்கவை அல்ல, எனவே தரவரிசைப்படுத்த முடியாது என்ற வாதத்தை ஏற்றுக்கொண்டது.  இதற்கு தீர்வு காண பல்வேறு பாடத்திட்டத்தில் இருந்து மாணவர்களின் மதிப்பெண்களை ஒப்பிடக்கூடிய மெட்ரிக் முறையை கொண்டு வரவும் பரிந்துரைத்தது.

    Also Read : கேட் தேர்வுகளை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு...!

    ஒரு பாடத்திட்டத்தின் அடிப்படையில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டால் மற்ற பாடத்திட்டங்களில் பயின்ற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என குழு கூறியது.

    அது மட்டுமல்லாமல் தமிழ் வழியில் பயின்ற கிராமபுற ஏழை மாணவர்களுக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தது.  நகர்ப்புற, ஆங்கில வழியில் கல்வி பயின்ற மற்றும் சமூகத்தில் முன்னோக்கிச் செல்லும் மாணவர்கள் மட்டுமே பயனடைவார்கள் என்றும் கூறியது. அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 2007- 2008 கல்வியாண்டில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

     
    First published:

    Tags: Entrance Exam

    அடுத்த செய்தி