அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் - அனில் சகஸ்ரபுத்தே

கோப்பு படம்

பொறியியல் படிப்பில் சேர கணிதம்  இயற்பியல் வேதியியல் ஆகிய பாடங்கள் கட்டாயமில்லை என்று வெளியான தகவல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது.

  • Share this:
நாடு முழுவதும் அனைத்து வகையான உயர்கல்வி படிப்புகளுக்கும் திறனறிதல் தேர்வு நடத்தப்படும் என்றும்  இந்தத் தேர்வின்  மதிப்பெண் அடிப்படையிலேயே கலை அறிவியல்  உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும்
என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தலைவர் அனில் சகஸ்ரபுத்தே  தெரிவித்துள்ளார்

இந்திய கல்வி மேம்பாட்டு கழகத்தின் சார்பில் சென்னையில் இன்று தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தலைவர் அனில் சகஸ்ரபுத்தே கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்.
தேசிய புதிய கல்விக்கொள்கை 12 ம் வகுப்பில் வேதியியல், கணிதம் படிக்காதவர்களும் பொறியியல் படிப்பில் மாணவர்கள்  சேர ஊக்குவிப்பதாகவும்  அந்த வகையில் தொழிற்கல்வி மாணவர்களும் பொறியியல் படிப்பில் சேரலாம் என்றும் கூறினார்.

பொறியியல் படிப்பில் சேர கணிதம்  இயற்பியல் வேதியியல் ஆகிய பாடங்கள் கட்டாயமில்லை என்று வெளியான தகவல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளதாக கூறிய அவர் தொழிற்கல்வி மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேருகின்ற போது அவர்கள் முதலாம் ஆண்டில் பொறியியல் படிப்பிற்கு அடிப்படையாக விளக்குங்கின்ற கணிதம் இயற்பியல் வேதியியல் ஆகிய பாடங்களை கட்டாயம் படித்து தேர்ச்சி அடைய வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் அனைத்து வகை உயர்கல்வி படிப்புகளிலும் மாணவர்கள் சேருகின்ற போது அவர்களின் திறனை அறியும் வகையில் நுழைவுத் தேர்வு அடிப்படையிலான ஒரு திறனறிவுத் தேர்வு நடத்தப்பட்டு அந்த மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தலைவர் சகஸ்ரபுத்தே தெரிவித்தார்.

 
Published by:Vijay R
First published: