தமிழ் வழியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து சரிவு...!

தமிழ் வழியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து சரிவு...!
  • News18
  • Last Updated: March 3, 2020, 5:45 PM IST
  • Share this:
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டிற்கு ஆண்டு சரிந்து வரும் நிலையில் தமிழ் வழியில் பொதுத்தேர்வு எழுதுவோர் எண்ணிக்கையும் சரிந்து வருகிறது.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் சரிந்து வருவது தேர்வுத் துறையின் புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் தமிழ் வழியில் தேர்வு எழுதக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையும் சரியத் தொடங்கியிருக்கிறது.

அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் சரிந்து வருகிறது. அதேபோன்று மாணவர்களின் இடைநிற்றல் விவகாரமும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.


இந்த நிலையில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் சரிந்து வருவது தேர்வுத்துறை வெளியிட்ட விவரங்கள் மூலமாக தெரியவந்துள்ளது.

அரசு பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக கடந்த 2017 ஆண்டு நடந்த 12-ம் வகுப்பு பொதுத் பொதுத்தேர்வை 8,93,262 பேர் பள்ளிகள் மூலமாக தேர்வு எழுதினர். இதுவே 2018-ம் ஆண்டு 8,60,434 ஆக குறைந்தது . கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்வில் மேலும் குறைந்து 8,42,512 ஆக குறைந்தது.

இந்த ஆண்டு 8,16,359 என்ற எண்ணிக்கையில் சரிந்திருக்கிறது. அதிகபட்ச எண்ணிக்கையான 2017-ம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 76,903 மாணவர்கள் குறைவாக எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதேபோன்று தமிழ்வழியில் தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் எண்ணிக்கை 60 முதல் 65 சதவிகிதம் என்ற அளவில் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை பொருத்தவரை 50 விழுக்காடு என்ற அளவிற்கு குறைந்து இருக்கிறது.

மொத்தமுள்ள 8.16 லட்சம் மாணவர்களில் 4.65 லட்சம் மாணவர்கள் மட்டுமே தமிழ் வழியில் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதன் மூலம் ஆங்கிலம் உள்ளிட்ட இதர மொழிகளில் பொது தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் எண்ணிக்கை அதிக அளவிலும், தமிழ் வழியில் எழுதக்கூடிய மாணவர்கள் எண்ணிக்கை குறைந்த அளவிலும் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதற்கான காரணம் என்ன என்பது குறித்து கல்வித்துறை ஆய்வு செய்யவேண்டும், தமிழ்வழியில் எழுதக்கூடிய மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also see...
First published: March 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading