தமிழ்நாட்டில் உள்ள 470க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பப்பதிவுக்கான கடைசி நாளாக கடந்த 19ஆம் தேதி அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகாததை கருத்தில் கொண்டு, அறிவிக்கப்பட்டு இருந்த கடைசி தேதி மாற்றி சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியானதில் இருந்து 5 நாட்கள் அவகாசத்தை நீட்டித்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டது.
அதன்படி, CBSE 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் (ஜூலை 22) வெளியானது.இதனையடுத்து பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது. நேற்று முன் தினம் வரை தினசரி 1,000 பேர் புதிதாக விண்ணபித்து வந்த நிலையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியானது முதல் 3,300க்கு மேற்பட்டோர் தினசரி விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: தாயகம் திரும்பிய உக்ரைன் மாணவர்கள் இந்தியாவில் மருத்துவப் படிப்பை தொடர இயலாது- மத்திய அரசு
அந்த வகையில் நேற்று மட்டும் 3,800க்கும் மேற்பட்டோர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். அந்த வகையில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இரண்டு லட்சத்தை நெருங்கியுள்ளது. 23ஆம் தேதி மாலை நிலவரப்படி, 1,99, 213 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களில் 1,50,858 பேர் கட்டணங்களை செலுத்தியுள்ளதாகவும், அதில் 1,35,281 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல், 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு இதுவரை 3,97,463 பேர் விண்ணப்பப்பித்துள்ளனர்.
இன்னும் ஓரிரு நாட்களில் இது 4 லட்சத்தை கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வரும் 27ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CBSC Exam Results, CBSE, Engineering, Higher education, Students