Home /News /education /

பொறியியல் தரவரிசை பட்டியல்: 200க்கு 200 கட் ஆப் எடுத்து அசத்திய மாணவர்கள்

பொறியியல் தரவரிசை பட்டியல்: 200க்கு 200 கட் ஆப் எடுத்து அசத்திய மாணவர்கள்

பொறியியல் கலந்தாய்வு

பொறியியல் கலந்தாய்வு

பொறியியல் தரவரிசையில் முதல் 10 இடங்களை பெற்றவர்கள் கட்ஆப்பில் 200 க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். வரும் 20-ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

    பி.இ.,  பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு தமிழக அரசு சார்பில் ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்த நிலையில், மாணவ, மாணவிகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய  அவர், பொறியியல் படிப்புக்கான தரவரிசையில் ரஞ்சிதா, ஹரினிகா, லோகேஷ் கண்ணன் ஆகியோர் முறையே 3 இடங்களை பிடித்திருப்பதாகத் தெரிவித்தார். தரவரிசையில் முதல் 10 இடங்களை பெற்றவர்கள் கட்ஆப்பில் 200 க்கு 200 மதிப்பெண்கள் பெற்றிருப்பதாகவும் கூறினார்.

    பொறியியல் படிக்க விண்ணப்பக் கட்டணம் செலுத்திய ஒரு லட்சத்து 69 ஆயிரம் பேரில் தகுதி வாய்ந்த ஒரு லட்சத்து 58 ஆயிரம் பேருக்கு தரவரிசை பட்டியல் வெளியிட்டிருப்பதாகவும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 22 ஆயிரத்து 587 மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பொறியியல் கலந்தாய்வில் யாருக்கு ரேண்டம் எண் இல்லை: அமைச்சர் பொன்முடி

    பொறியியல் தரவரிசை பட்டியலில் விடுபட்ட மாணவர்கள் வரும் 19-ம் தேதிக்குள் விண்ணப்பக்கலாம் என்று அமைச்சர் பொன்முடி கூறினார். ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை ஏழரை சதவீத இடஒதுக்கீட்டுப்பிரிவு மற்றும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். பொதுப்பிரிவினருக்கு ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் அக்டோபர் 21-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று கூறிய அமைச்சர், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான ரேண்டம் எண் இந்தாண்டு இல்லை என்றும்  தெரிவித்தார். பொறியியல் மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Engineering, Engineering counselling

    அடுத்த செய்தி