மருத்துவர் கனவு தகர்ந்ததால் பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவர்கள்!

12-ம் வகுப்பில் 600-க்கு 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களும் இந்த சிறப்பு துணை கலந்தாய்வில் கலந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவர் கனவு தகர்ந்ததால் பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவர்கள்!
பொறியியல் கலந்தாய்வு
  • News18
  • Last Updated: July 28, 2019, 7:29 PM IST
  • Share this:
நீட் தேர்வுக்கு முயற்சித்து மருத்துவ இடம் கிடைக்காத விரக்தியில், பொறியியல் துணை கலந்தாய்வில் கலந்து கொண்டதாக மாணவர்கள் பலர் வேதனை தெரிவித்தனர்.

பொறியியல் படிப்பிற்கான 4 கட்ட ஆன்லைன் கலந்தாய்வு நடந்து முடிந்த நிலையில், சிறப்பு துணை கலந்தாய்வு இன்று தொடங்கி, 3 நாட்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.

முதல் நாளான இன்று, 2000 மாணவர்கள் நேரில் அழைக்கப்பட்டனர். வழக்கமாக துணை கலந்தாய்விற்கு,   12-ம் வகுப்பில் தோல்வி அடைந்து, துணைத்தேர்வு மூலம் குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றவர்களே பங்குபெறுவார்கள்.


ஆனால் இம்முறை, 600-க்கு 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களும் கலந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மாணவர்களிடம் கேட்ட போது, மருத்துவர் ஆக வேண்டும் என்கிற கனவில், நீட் தேர்வுக்கு முயன்று, நீட் தேர்வு மதிப்பெண் மூலம் அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்காததால் பொறியியல் துணை கலந்தாய்வில் பங்கேற்றுள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

Also watch: டிக்டாக் குற்றங்களின் கதை!
First published: July 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading