முன்னதாகவே வெளியான பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல்: உடனே நீக்கிய தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம்

மாணவர்கள்(மாதிரிப் படம்)

பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல் முன்னதாகவே வெளியான நிலையில் உடனே நீக்கம் செய்யப்பட்டது.

 • Share this:
  கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, மக்களது வாழ்க்கை சம்பந்தமான ஒவ்வொரு துறையிலும் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

  இந்த பெருந்தொற்றால், வெகுவாக பாதிப்புக்குள்ளான துறைகளில் கல்வித் துறையும் ஒன்றாகும். தமிழகத்திலும் பள்ளிகளும் கல்லூரிகளும் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாமல் உள்ளன. கொரோனா இரண்டாவது அலை காரணமாக பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டனர். அதனைதொடர்ந்து, நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான பணிகளைத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தொடங்கியது.

  அதன்படி பி.இ, பி.டெக். பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 24ம் தேதியுடன் நிறைவுபெற்ற நிலையில், மாணவர்களுக்கான ரேண்டம் எண் மறுநாள் வெளியிடப்பட்டது.

  1,74,930 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேருவதற்கு இந்த ஆண்டு விண்ணப்பித்துள்ளனர். ஏற்கனவே பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டதை தொடர்ந்து வருகிற 14-ஆம் தேதி பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்திருந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த நிலையில் இன்று பிற்பகல் 2 மணி அளவில் பொறியியல் படிப்பிற்கான ரேங்க் பட்டியல் முன்கூட்டியே இணையதளத்தில் வெளியானது. வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே ஆயிரக்கணக்கான மாணவர்கள் பொறியியல் படிப்பிற்கான தங்களுடைய ரேங்க் பட்டியலை பதிவிறக்கம் செய்தனர். பொறியியல் படிப்பிற்கான ரேங்க் பட்டியல் வரும் 14ந் தேதி வெளியாகவிருந்த நிலையில் தவறுதலாக வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் இணையதள பக்கத்திலிருந்து ரேங்க் பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நீக்கியது.
  Published by:Karthick S
  First published: