Home /News /education /

பொறியியல் முதலாம் ஆண்டு ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்.. மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

பொறியியல் முதலாம் ஆண்டு ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்.. மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

கோப்புப் படம்

கோப்புப் படம்

தமிழகம் முழுவதும் பொறியியல் முதலாம் ஆண்டு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில், கல்லூரிக்கு நேரடியாக சென்று படிப்பதே சிறந்தது என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் ஆன்லைன் கலந்தாய்வு கடந்த மாதம் 1-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி முடிவடைந்தது. கலந்தாய்வில் பங்கேற்ற 69,752 மாணவ, மாணவிகள் தங்களுக்கான கல்லூரிகளை தேர்வு செய்தனர். இருப்பினும் அரசு ஒதுக்கீட்டு இடங்களில், 90,000 இடங்கள் காலியாக உள்ளன.

    இந்நிலையில், முதலாம் ஆண்டு பி.இ, பி.டெக், பி.ஆர்க் படிப்புகளுக்கான ஆன்லைன் வகுப்புகள், திங்கள்கிழமை தொடங்கின. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி வரை வகுப்புகள் இருக்கும் என்றும், வாரத்தில் சனிக்கிழமை உட்பட 6 நாட்களும் வகுப்புகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பை பொறுத்தவரை, செய்முறை பயிற்சிகள் அதிகம் இருக்கும் நிலையில், கல்லூரிக்கு சென்று படிப்பதே சிறப்பாக இருக்கும் எனவும் மாணவர்கள் கூறியுள்ளனர்.



    நெட்வொர்க் பிரச்னையால் ஆன்லைன் கல்வி தடைபடுவதாகவும், ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்பதில் சிரமம் ஏற்படுகிறது என்றும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 26-ஆம் தேதி தொடங்கும் என்றும், பருவத்தேர்வு மார்ச் 8-ஆம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Rizwan
    First published:

    Tags: Engineering

    அடுத்த செய்தி