Home /News /education /

பொறியியல் படிப்புகளை ஆன்லைன், நேரடி முறையில் வழங்கலாம் - அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்

பொறியியல் படிப்புகளை ஆன்லைன், நேரடி முறையில் வழங்கலாம் - அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கலந்தாய்வில் காலியாக உள்ள இடங்களை 15 ஆகஸ்ட்க்குள் நிரப்ப வேண்டும் அதற்கு பிறகான தேதிகளில் மாணவர்களை சேர்க்கக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு கல்வி ஆண்டிற்கான பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகளை ஆகஸ்ட் முதல் தேதியில்  தொடங்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. கலந்தாய்வில் காலியாக உள்ள இடங்களை 15 ஆகஸ்ட்க்குள் நிரப்ப வேண்டும் அதற்கு பிறகான தேதிகளில் மாணவர்களை சேர்க்கக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் கல்வி ஆண்டிலும் நாடு முழுவதும் பொறியியல் படிப்புகளை ஆன்லைன் வழியிலும், நேரடி முறையிலும் வழங்கலாம் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு அறிவித்துள்ளது. அடுத்த கல்வி ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அட்டவணையை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஜூன் மாதத்தில் முதற்கட்ட கலந்தாய்வை தொடங்கி, இறுதிகட்ட கலந்தாய்வை ,ஜூலை 20 அல்லது அதற்கு முன்னதாக முடிக்க வேண்டும் எனவும்,கலந்தாய்வில் காலியாக உள்ள இடங்களை 15 ஆகஸ்ட்டுக்குள் நிரப்ப வேண்டும் எனவும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு தெரிவித்துள்ளது.

Also Read : தனியார் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் - தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

ஆகஸ்ட் 15 தேதிக்குப்பின் மாணவர்களை சேர்க்கக்கூடாது என்றும், ஆகஸ்ட் 1 ம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கப்பட வேண்டும் என்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் வழியிலான கல்வி அனைத்து படிப்புகளுக்கும் வழங்கப்பட்டன. தற்போது தொற்று குறைந்திருந்தாலும், முழுமையாக குறையாத ஒரு சூழலில் வரும் கல்வி ஆண்டிலும் ஆன்-லைன் வழிக் கல்விக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
Published by:Vijay R
First published:

Tags: College, Engineering

அடுத்த செய்தி