பொறியியல் கலந்தாய்வு: தொடங்குவதற்கு முன்பே 12,837 இடங்கள் காலி!

மாதிரிப் படம்

மொத்தம் 1 லட்சத்து  51 ஆயிரத்து 870 இடங்கள் உள்ள நிலையில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 33 பேருக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதன் மூலம் கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பே 12 ஆயிரத்து 837 இடங்கள் காலியாகியுள்ளது.  எனினும் இது கடந்த காலங்களை விட குறைவாகும்.

  • Share this:
    பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான  தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், அவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. கலந்தாய்வை 5 கட்டங்களாக ஆன்லைனில் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

    பொறியியல் படிப்பில் சேருவதற்காக மாணவர்கள்  ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிகலாம் என அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து சுமார் 1 லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேருவதற்கு இந்த ஆண்டு விண்ணப்பித்தனர். இவர்களில் தகுதியான  ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 33 பேருக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

    இதில், 87 ஆயிரத்து 291 பேர் மாணவர்கள், 51 ஆயிரத்து 730பேர் மாணவிகள், 12 பேர் திருநங்கைகள் ஆவர். 13 பேர் 200க்கு 200 மதிப்பெண் பெற்றனர்.  8 பேர்  199.5 கட் ஆப் மதிப்பெண்ணும் 22 மாணவர்கள் 199 கட் ஆப் மதிப்பெண்ணும் பெற்றனர்.

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு

    மருத்துவ படிப்பு போன்று பொறியியல்  படிப்பிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு 15 ஆயிரத்து 185 பேர் விண்ணப்பித்து இருந்தனர். மொத்தம் 11 ஆயிரத்து 390 பேருக்கு இந்த ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைக்கும். இந்த இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு தனியாக நடைபெறும்.

    12,887 இடங்கள் காலி

    மொத்தம் 1 லட்சத்து  51 ஆயிரத்து 870 இடங்கள் உள்ள நிலையில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 33 பேருக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதன் மூலம் கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பே 12 ஆயிரத்து 837 இடங்கள் காலியாகியுள்ளது.  எனினும் இது கடந்த காலங்களை விட குறைவாகும். கடந்த ஆண்டு கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களும் 2019ம் ஆண்டில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களும்  காலியாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க: காலாண்டுத் தேர்வு அட்டவணை: குழப்பத்தில் அரசு பள்ளி மாணவர்கள்


    இன்று முதல் கலந்தாய்வு:

    தரவரிசை பட்டியலில் இடம் பெற்றோருக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறுகிறது.  முதல் நாளான இன்று  அரசு பள்ளி மாணவ- மாணவியர்,  விளையாட்டு,முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத் திறனாஇகள் அடங்கிய சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. வரும் 24ம் தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது.

    இதையும் படிங்க: இன்றைய தலைப்பு செய்திகள் : 8-ம் வகுப்பு வரையான வகுப்புகள் தொடங்குமா?


    இதன் பின்னர், வரும் 27ம்தேதி பொதுபிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. அக்டோபர் 17ம் தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. அக்டோபர் 19- 23ம் தேதிவரை  துணை கலந்தாய்வுவும்,  அருந்ததியர் உள் ஒதுக்கீட்டில் காலியாகும் இடங்களை ஆதி திராவிடர்   மாணவர்களுக்கு ஒதுக்கும் கவுன்சிலிங் அக்டோபர் 24-25ம் தேதிகளிலும் நடைபெறுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Murugesh M
    First published: