தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி மாற்றம்

மாதிரி படம்

தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 11-ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது 14ந் தேதி வெளியாகும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

 • Share this:
  பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதியை மாற்றம் செய்து, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

  தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான, ரேண்டம் எண் கடந்த 25ம் தேதி வெளியானது. அதைதொடர்ந்து, தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 11-ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது 14ந் தேதி வெளியாகும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

  இதுதொடர்பான அறிக்கையில், தொழிற்கல்வி படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையிலான கலந்தாய்வு, செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, ஆன்லைன் மூலம் நடைபெறும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதே தேதியில், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவு உள்ளிட்ட மாணவர்களுக்கான சிறப்பு கலந்தாய்வும் நடைபெறுகிறது.

  தொழிற்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் அக்டோபர் 5 ந் தேதி வரையிலும், பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் அக்டோபர் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. துணை கலந்தாய்வு அக்டோபர் 19ஆம் தேதி முதல் 23ம் தேதி வரையும், அருந்ததியினர் மற்றும் பட்டியல் பிரிவினருக்கான கலந்தாய்வு அக்டோபர் 24 மற்றும் 25ம் தேதிகளிலும், நடைபெறும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: