பொறியியல் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்போது?

பொறியியல் சேர்க்கைக்கு ஆன்லைனில் பதிவு செய்வதற்கான தேதி நாளை அறிவிக்கப்பட உள்ளது.

பொறியியல் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்போது?
கிண்டி பொறியியல் கல்லூரி.
  • Share this:
தமிழகத்தில் இளநிலை பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. கலந்தாய்வில் பங்கேற்க மாணவர்கள் முதற்கட்டமாக ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.

கடந்த ஆண்டு மே மாதத்தில் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான ஆன்லைன் பதிவு துவங்கியது. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனோ பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தேதி அறிவிப்பில் காலதாமதம் ஏற்பட்டது.

தற்போது அமைச்சர் கேபி அன்பழகன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து விட்டார். இதனையடுத்து நாளை மாலை பொறியியல் கலந்தாய்விற்கு ஆன்லைனில் பதிவு செய்வதற்கான தேதியை அமைச்சர் அறிவிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதனையடுத்து இந்த வாரத்திலிருந்தே கலந்தாய்விற்கான பதிவு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வை ஆன்லைனில் நடத்துவதற்கு உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டினைப் போலவே இந்த ஆண்டும்  பொறியியல்  கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்த உள்ளது.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading