Home /News /education /

பி.இ படிக்க இருக்கும் மாணவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய கல்வி உதவித் தொகை திட்டங்கள்

பி.இ படிக்க இருக்கும் மாணவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய கல்வி உதவித் தொகை திட்டங்கள்

பொறியியல் கலந்தாய்வு

பொறியியல் கலந்தாய்வு

அனுமதிப்பட்டுள்ள ஒட்டுமொத்த இடங்களில் குறைந்தது 5% இடங்களுக்கு (பாடநெறி வாரியாக) கல்வி கட்டண சலுகையை தனியார் நிறுவனங்கள் அளிக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக வளாகம், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம்‌, சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் மத்திய கல்வி நிறுவனங்கள் ஒப்படைத்த இடங்களுக்கான சேர்க்கை TNEA Online 2022 மூலம் ஒற்றை சாளரை முறையாக நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டு கலந்தாய்வில் 434 பொறியியல் கல்லூரிகள் கலந்து கொள்ளவுள்ளன. இதில், கிட்டத்தட்ட 90 சதவீதம் அரசு மானியம் பெறாத சுயநிதி கல்லூரிகள் ஆகும். இந்த சுயநிதி கல்லூரிகளில் 55-60 சதவீதம் (1,96,627) அரசு ஒதுக்கீட்டு இடங்களாக வரும். இதர இடங்களை தனியார் தன்னிச்சையாக நிரப்பிக் கொள்ளும். கிட்டத்தட்ட 80%க்கும் அதிகமான மாணவர்கள் சேர்க்கை பெற உள்ளனர். உள்கட்டமைப்பு மேம்பாடு, ஆசிரியர்களின் ஊதியம் போன்ற பல்வேறு செலவினங்கள் காரணமாக தனியார் பொறியியல் கல்லூரிகளில் கல்வி கட்டணங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. அதிகபட்சமாக ஆண்டு ஒன்றுக்கு ரூ. 1.44 லட்சம் முதல் ரூ. 1.58 வரை (அனைத்தையும் கூறுகையும் சேர்த்து)  செலவு செய்வதாக தெரிவிக்கின்றனர்.

    எனவே, பொறியியல் படிக்கத் திட்டமிட்டருக்கும் மாணவர்கள் கீழ்காணும் கல்வி உதவித் தொகை திட்டங்கள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். தகுதியும், தேவையும் இருந்தால் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

    7.5% முன்னுரிமை மாணவர்கள்: 

    6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமை அடிப்படையில் TNEA ஒற்றை சாளரை மூலம் தொழிற்படிப்பில் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்றுக் கொள்கிறது.

    7.5% மாணவர்களுடைய  கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும்  தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும்.

    பொறியியல் தரவரிசைப் பட்டியலில்,  7.5% முன்னுரிமை பிரிவின் கீழ் 2,20,99 விண்ணப்பதாரர்கள் இடம்பெற்றுள்ளனர்.அதே போன்று, அரசு பள்ளியில் படித்த 7.5% முன்னுரிமை மாணவர்களுக்கான தொழிற்கல்வி தரவரிசைப் பட்டியலில் (7.5% RESERVATION - VOCATIONAL ) 488 விண்ணப்பதாரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    முதல் பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டண விலக்கு: பொறியியல் கல்லூரிகளில் (அரசு, அரசு உதவி பெறும், தனியார் சுயநிதி) TNEA ஒற்றைச் சாளரை மூலம் சேர்க்கை பெறும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசு ஏற்றுக் கொள்கிறது.

    இத்திட்டத்தின் கீழ், கல்விக் கட்டணம் மட்டுமே சலுகையாக வழங்கப்படும். மேலும், விண்ணப்பதாரின் அண்ணன்/தங்கை ஆகியவர்கள் ஏற்கனவே கல்விக் கட்டண சலுகை பெற்றிருக்க கூடாது.

    AICTE கல்வி கட்டண சலுகைத் திட்டம் (AICTE Tuition Fee Waiver (TFW) Scheme): 

    இத்திட்டத்தை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் நிர்வகித்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ்,  தனியார் நிறுவனங்கள், அனுமதிப்பட்டுள்ள ஒட்டுமொத்த இடங்களில் குறைந்தது 5% இடங்களுக்கு (பாடநெறி வாரியாக) கல்வி கட்டண சலுகை அளிக்க வேண்டும்.இந்த கல்வி கட்டணத்தை  தனியார் கல்வி நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும்.  கல்விக் கட்டணம் மட்டுமே சலுகையாக வழங்கப்படும்.

    தகுதி: பெற்றோர்களின் ஆண்டு வருமானம் குறைந்தது 6 லட்சத்திற்கு மிகாமல் வேண்டும். இந்த திட்டத்தை ஏஐசிடிஇ-ன் கீழ் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் செயல்படுத்த வேண்டும். எனவே, நீங்கள் சேர இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் இத்திட்டத்தை குறித்து கேட்டு பயனடையுங்கள்.

    10-ஆம் வகுப்பிற்குப் பிந்தைய கல்வி உதவித் தொகைத் திட்டம்:

    ஆதிதிராவிடர்,ஆதிதிராவிட அருந்ததியர், பழங்குடியினர் பிரிவினருக்கு 10-ஆம் வகுப்பிற்குப் பிந்தைய கல்வி உதவித் தொகைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சம் மிகாமல் இருக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

    மேலும், விவரங்களுக்கு: TAMIL NADU ENGINEERING ADMISSIONS 2022     

    குறைகள் மற்றும் சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் தொழிநுட்பக் கல்வி இயக்ககத்தில் செயல்பட்டு உதவி சேவை மைய எண் 1800-425-0110- ஐ தொடர்பு கொள்ளலாம்.

    இதையும் வாசிக்க75வது சுதந்திர தின அமுத பெருவிழா : கல்வியில் இதுவரை கடந்து வந்த பாதை என்ன?

    அருகில் உள்ள பொறியியல் சேர்க்கை வசதி மையங்களில் ( TNEA FACILITATION CENTERS (TFC)) நேரில் சென்று தகவல் பெறலாம்.சேர்க்கை வசதி மையங்களைத் ( TNEA FACILITATION CENTERS) தெரிந்து கொள்ள இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Engineering counselling

    அடுத்த செய்தி