முகப்பு /செய்தி /கல்வி / பொறியியல் மாணவர் சேர்க்கை : அரசு பள்ளி மாணவர்கள் 22,000 பேர் விண்ணப்பம்

பொறியியல் மாணவர் சேர்க்கை : அரசு பள்ளி மாணவர்கள் 22,000 பேர் விண்ணப்பம்

காட்சிப் படம்

காட்சிப் படம்

Engineering Admission : இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஒரு லட்சத்து 69 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் .

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு, இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள் 22,000பேர் விண்ணப்பித்துள்ளனர் .கடந்த ஆண்டை விட 5 ,000 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குனரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஒரு லட்சத்து 69 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் . இவர்களில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் எண்ணிக்கை 22 ,000 என்று தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு 17,000 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு கூடுதலாக 5,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

ALSO READ | மத்திய அரசின் கல்வி உதவித்தொகை : சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம் - எப்படி பெறுவது?

 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ், 11,000 இடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் கடந்த ஆண்டு 7000 இடங்கள் மட்டுமே நிரம்பின. இந்த ஆண்டு கூடுதலாக இடங்கள் நிரம்ப வாய்ப்புள்ளதாக உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

First published:

Tags: Engineering, Engineering student