ஹோம் /நியூஸ் /கல்வி /

முதுநிலை நீட் தேர்வு : விண்ணப்பிப்பதற்கான தகுதித் தேதியை மாற்றியமைக்க வேண்டும் - ஓ.பி.எஸ் வலியுறுத்தல்

முதுநிலை நீட் தேர்வு : விண்ணப்பிப்பதற்கான தகுதித் தேதியை மாற்றியமைக்க வேண்டும் - ஓ.பி.எஸ் வலியுறுத்தல்

காட்சி படம்

காட்சி படம்

நீட் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதித் தேதியை மாற்றியமைக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்விற்கு 2023 ஆம் ஆண்டு தேர்ச்சி பெறும் மாணவர்கள் விண்ணப்பிக்க இயலாத வகையில் இருக்கும் தகுதி தேதிகளை மாற்ற வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்விற்கு விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது. ஜனவரி 7 ஆம் தேதியில் இருந்து ஜனவரி 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு மார்ச் 5 ஆம் நாள் நடைபெறும் என்று தேசிய மருத்துவக் குழுமம் தெரிவித்துள்ளனர்.

மருத்துவத்தில் முதுநிலைப் படிப்பிற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியாக 31.03.2023 -க்குள் மருத்துவப் பயிற்சியை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் தற்போது இறுதியாண்டு படிக்கும் மருத்துவ மாணவர்கள் விண்ணப்பிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஓ.பி.எஸ் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தங்களது மருத்துவ பயிற்சியை முடிப்பதற்கு ஜூன் மாதம் ஆகிவிடும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஏப்ரல் மாதம் முடியும். இந்த நிலையில் தற்போது இறுதியாண்டு மருத்துவம் பயிலும் மாணவ, மாணவியர் முதுநிலை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றால் பயிற்சியை முடிப்பதற்கான தேதியை தற்போதைய 31.03.2023 இல் இருந்து 30.06.2023 என

மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Also Read : அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக ஆசிரியர்களுக்குச் சம்பளம்... தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு

31.03.2023 தேதியை விண்ணப்பிக்கத் தகுதியாக வைத்தால் தற்போதைய இறுதி ஆண்டு மாணவர்கள் ஒரு ஆண்டை வீணாக்கக்கூடிய நிலைமைக்குத் தள்ளப்படுவார்கள். இது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. எனவே, அவர்களும் 2023 முதுநிலை நீட் தேர்வை எழுதும் வகையில் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும்

மாணவர்களில் நலன் கருதி தேசிய மருத்துவக் குழு விண்ணப்பிக்கத் தகுதி தேதியை மாற்றியமைக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

First published:

Tags: Neet, Neet Exam