முகப்பு /செய்தி /கல்வி / 7.5 சதவிகித ஒதுக்கீடு : 80 சதவிகித அரசுப் பள்ளி மாணவர்கள் தனியார் பொறியியல் கல்லூரிகளை தேர்ந்தெடுத்துள்ளனர்

7.5 சதவிகித ஒதுக்கீடு : 80 சதவிகித அரசுப் பள்ளி மாணவர்கள் தனியார் பொறியியல் கல்லூரிகளை தேர்ந்தெடுத்துள்ளனர்

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த 5,920 மாணவர்களில், 4,920 மாணவர்கள் தனியார் பொறியியல் கல்லூரிகளையே தேர்வு செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் 82 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்கள்,  அரசு பொறியியல் கல்லூரிகளை ஆர்வத்துடன் தேர்ந்தெடுக்கவில்லை அரசு பொறியியல் கல்லூரிகளில் ஏராளமான மாணவர்கள் சேருவார்கள் என அரசு எதிர்பார்த்த நிலையில், தனியார் கல்லூரிகளையே  மாணவர்கள் அதிகம் விரும்பியதால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த 5,920 மாணவர்களில், 82 விழுக்காடு 4,920 மாணவர்கள் தனியார் பொறியியல் கல்லூரிகளையே தேர்வு செய்துள்ளனர். பொறியியல், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என  தமிழக அரசு அறிவித்தது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 11 ஆயிரம் பொறியியல் இடங்கள்.  7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டில்  இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நடந்துமுடிந்த பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு 9 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 5 ஆயிரத்து 920 மாணவர்கள் மட்டுமே கல்லூரிகளை தேர்வு செய்தனர். இவர்களுள்,  4,920 பேர் தனியார் பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்து உள்ளனர்.

அண்ணா பல்கலைக் கழக வளாக கல்லூரிகளில் 161  மாணவர்களும்,  அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 391 மாணவர்களும் சேர்ந்து இருக்கின்றனர். அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 465 மாணவர்கள் என 1,017 மாணவர்கள் மட்டுமே அரசு கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அதிகபட்சமாக 82 விழுக்காடு மாணவர்கள், அதாவது 4,920 மாணவர்கள். தனியார் பொறியியல் கல்லூரிகளையே தேர்வு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் படிக்க அரசு கல்லூரிகளை தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏராளமான மாணவர்கள் தனியார் பொறியியல் கல்லூரிகளை தேர்வு செய்திருப்பது உயர் கல்வித் துறையை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. கிட்டத்தட்ட 5 ஆயிரம் மாணவர்கள் தனியார் கல்லூரிகளை தேர்வு செய்து இருப்பதால்  அவர்களுக்கான கட்டணம்  4 ஆண்டுகளுக்கும் சேர்த்து பல கோடி ரூபாயை அரசு செலவழிக்க வேண்டிய நிலையும் ஏற்ப்பட்டுள்ளது.

Must Read : நீட் தேர்வுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் 12 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம்

இதே சமயம் மாணவர்கள் அதிகம அளவில் அரசு கல்லூரிகளை தேர்ந்தெடுத்திருந்தால் அரசுக்கான செலவு குறைந்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Anna University, Engineering counselling, Engineering student