முகப்பு /செய்தி /கல்வி / Neet Exam | தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியதற்கு கல்வியாளர்கள் வரவேற்பு...

Neet Exam | தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியதற்கு கல்வியாளர்கள் வரவேற்பு...

அமைச்சர் க.பொன்முடி

அமைச்சர் க.பொன்முடி

தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை என மத்திய அரசிடம் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியதற்கு, கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

எம்.பி.பி.எஸ் படிப்புக்காக தேசிய அளவில் நீட் என்ற தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், இத்தேர்வை எதிர்கொள்ள முடியாமல் கிராமபுற மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனால் தமிழகத்தில் நீட் தேர்வு நடத்த பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுடன், மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் நீட் தேர்வு அவசியம் இல்லை என்றும், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், தமிழகத்துக்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதே அதிமுகவின் கொள்கை என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார். இந்தாண்டு தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா என கேள்வி எழுப்பியுள்ள அவர், மருத்துவ கல்வி ஒதுக்கீடுக்கு, அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் வினவினார்.

தமிழக அரசின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள கல்வியாளர் ஜெய்பிரகாஷ் காந்தி, பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து, சட்ட வல்லுநர்களை ஆலோசித்து தமிழக அரசு சட்டம் இயற்றுவது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க...  Today Headlines News in Tamil: இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (மே 25)

பழைய முறைப்படி, பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், மருத்துவர் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் பெற்றோரின் எதிர்பார்ப்பு எனவும், ஜெய்பிரகாஷ் காந்தி கூறினார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: MBBS, Neet Exam, Ponmudi