Home /News /education /

புதிய கல்விக் கொள்கையை மறைமுகமாக அரசு ஏற்கிறதா: கல்வியாளர்கள் கேள்வி- தமிழக அரசு விளக்கம்

புதிய கல்விக் கொள்கையை மறைமுகமாக அரசு ஏற்கிறதா: கல்வியாளர்கள் கேள்வி- தமிழக அரசு விளக்கம்

டிபிஐ

டிபிஐ

New education policy | புதிய கல்விக் கொள்கை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மீது கல்வியாளர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.

    அரசியல் ரீதியாக புதிய கல்விக் கொள்கையை திமுக எதிர்த்தாலும், பள்ளிக்கல்வித் துறையிலிருந்து புதிய கல்விக் கொள்கை சார்ந்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    புதிய கல்விக் கொள்கை 2020-ஐ மத்திய அரசு கடந்த ஆண்டு அமல்படுத்தியது. இதனை கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், தமிழக அரசு புதிய கல்விக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. புதிய கல்விக் கொள்கை குலக் கல்வியின் மறுவடிவம் என்பதால், இதனை அமல்படுத்தப் போவதில்லை என்று தெரிவித்திருந்தது.

    ஒருபுறம் புதிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என அரசு அறிவித்துள்ள போதிலும், பள்ளிக்கல்வித் துறையிலிருந்து புதிய கல்விக் கொள்கை சார்ந்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகி வருவது ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    புதிய கல்விக் கொள்கையில் உள்ள, தன்னார்வலர்களை வைத்து கல்வி கற்பிக்கும் திட்டத்தையே, "இல்லம் தேடி கல்வி" என்ற பெயரில் தமிழக அரசு அறிமுகம் செய்திருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஆசிரியர்களுக்கு கலாச்சார பயிற்சி அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.

    அதைத்தொடர்ந்து அண்மையில் ஆசிரியர்களுக்கு எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறையில் இருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு என்பது புதிய கல்விக் கொள்கையில் "தொடர் பணி தொழில் வளர்ச்சி" என்ற தலைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சம் என்று கூறப்படுகிறது.

    புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் சார்ந்து பள்ளிக்கல்வித்துறை வெளியிடும் அறிவிப்புகளால், தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை மறைமுகமாக ஏற்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஊழல் என்றால் என்னவென்றே தெரியாத பாஜக வேட்பாளர்கள் - அண்ணாமலை பேச்சு


    இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, இது ஆசிரியர்களுக்கான திறனை மேம்படுத்தும் பயிற்சிதான் என்றும், இதற்கும் புதிய கல்விக் கொள்கைக்கும் சம்பந்தமில்லை என்றும் தெரிவித்துள்ளது.

    Published by:Karthick S
    First published:

    Tags: New Education Policy, Tamil Nadu

    அடுத்த செய்தி