மருத்துவ கலந்தாய்வில் தவறான சான்றிதழ்கள்: 4 மாணவர்கள் வெளியேற்றம்!

மருத்துவ கலந்தாய்வில் சந்தேகத்தின்பேரில் 2 மாணவர்களின் சான்றிதழ்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டபிறகு அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவ கலந்தாய்வில் தவறான சான்றிதழ்கள்: 4 மாணவர்கள் வெளியேற்றம்!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: July 11, 2019, 7:30 AM IST
  • Share this:
மருத்துவக் கலந்தாய்வில் போலியான இருப்பிடச் சான்றிதழ் மற்றும் குளறுபடியான சான்றிதழ்கள் அளித்த மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

தமிழகத்தில் நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. வெளிமாநில மாணவர்கள் 218 பேரின் பெயர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய 4 மாநில தரவரிசை பட்டியலிலும் இடம் பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்தது.

போலி சான்றிதழ்கள் மூலம் இந்த முறைகேடு நடப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் நடைபெற்றுவரும் கலந்தாய்வில் ஸ்ரீகாந்த், குப்பல நாகசாயி உள்பட 4 மாணவர்கள் போலியான இருப்பிடச் சான்றிதழ் அளித்ததால் கலந்தாய்வில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.


இதே பிரச்னையால் 2 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க வரவில்லை. சந்தேகத்தின்பேரில் 2 மாணவர்களின் சான்றிதழ்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டபிறகு, கலந்தாய்வில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் படிக்க... பணிபுரியும் இடத்தில் மனஅழுத்தமா? எப்படி விடுபடுவது?அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்