சென்னையில் குடிநீர் பற்றாக்குறையால் பள்ளிக்கு விடுமுறை!

இதேநிலை நீடித்தால் மாணவிகளின் படிப்பு கேள்விக்குறியாகிவிடும் என பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

சென்னையில் குடிநீர் பற்றாக்குறையால் பள்ளிக்கு விடுமுறை!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: July 5, 2019, 8:48 PM IST
  • Share this:
சென்னையில் குடிநீர் பற்றாக்குறையால் பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கிழக்கு தாம்பரத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியான கிருஸ்தவ ராஜா பெண்கள் மேல்நிலையில் 3,000-க்கும் மேற்பட்ட பெண்கள் படித்து வருகின்றனர்.

6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில், கடந்த ஒருவாரமாக தண்ணீர் பற்றாக்குறை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.


Also read... பள்ளி திறந்து 10 நாளாகியும் பாடப்புத்தகங்கள் அச்சடித்தே முடிக்கவில்லை!

இந்நிலையில், தண்ணீர் பிரச்னையால் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு பயின்று வரும் மாணவிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை அறிவித்து பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சனி, ஞாயிறு விடுமுறையைத் தொடர்ந்து திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை மாணவிகள் வகுப்புகளுக்கு வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.Also read... பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 தேர்வு முறைகளில் வருகிறது அதிரடி மாற்றங்கள்!

இதேநிலை நீடித்தால் மாணவிகளின் படிப்பு கேள்விக்குறியாகிவிடும் என பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

Also see...

First published: June 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading