Home /News /education /

கனமழை காரணமாக இன்று 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக இன்று 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

மாதிரி படம்

மாதிரி படம்

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வங்கக் கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. மேலும் 4 நாட்களுக்கு மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மிக பலத்த மழை பெய்யும் என்று தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, ராமநாதபுரம், மதுரை, திருவாரூர், சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, புதுக்கோட்டை, விருதுநகர், அறியலூர், திண்டுக்கல், தேனி, பெரம்பலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மழையின் தீவிரத்தை பொறுத்து மற்ற மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Heavy rain, School Leave, Tn schools, Very Heavy rain

    அடுத்த செய்தி