• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • அரசு பள்ளி மாணவியின் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற தமிழிசை!

அரசு பள்ளி மாணவியின் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற தமிழிசை!

மாணவி ஜீவிதா - தமிழிசை சவுந்தரராஜன்

மாணவி ஜீவிதா - தமிழிசை சவுந்தரராஜன்

தமிழிசைக்கு நன்றி தெரிவித்த மாணவி ஜீவிதா, அரசு பள்ளியில் படித்தாலும், தன்னம்பிக்கை இருந்தால் நீட் தேர்வில் வெற்றி பெறலாம் என்றார்.

  • Last Updated :
  • Share this:
நீட்டில் தேர்ச்சி பெற்ற ஏழை தையல் தொழிலாளி மகளின் மருத்துவ படிப்புக்கான கட்டண செலவை தமிழிசை சவுந்தரராஜன் ஏற்றார்.

சென்னை அனகாபுத்தூரைச் சேர்ந்த தையல் தொழிலாளியான பன்னீர்செல்வம் என்பவரின் மகள் ஜீவிதா நீட் தேர்வில் 605 மதிப்பெண்கள் பெற்றார். அரசுப் பள்ளியில் படித்த மாணவி ஜீவிதா ஏழ்மை காரணமாக மருத்துவ கல்லூரியில் சேர்வதில் சிரமப்பட்டார். இந்நிலையில் மாணவி ஜீவிதாவுக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உதவி முன்வந்தார்.

இது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், மாணவி ஜீவிதாவின் விடாமுயற்சியை பாராட்டி அவருடைய மருத்துவ கல்லூரி கட்டண செலவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். மேலும், நேரில் சென்று மாணவி ஜீவிதாவை தமிழிசை பாராட்டினார்.



அப்போது அவருக்கு நன்றி தெரிவித்த மாணவி ஜீவிதா, அரசு பள்ளியில் படித்தாலும், தன்னம்பிக்கை இருந்தால் நீட் தேர்வில் வெற்றி பெறலாம் என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Yuvaraj V
First published: