ஹோம் /நியூஸ் /கல்வி /

NEET Exam : நீட் தேர்வு அவசியம் தேவை - தமிழிசை சவுந்தரராஜன் கருத்து

NEET Exam : நீட் தேர்வு அவசியம் தேவை - தமிழிசை சவுந்தரராஜன் கருத்து

தமிழிசை சவுந்தரராஜன்

தமிழிசை சவுந்தரராஜன்

மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ஒரு மருத்துவர் என்ற முறையில் நீட் தேர்வு அவசியம் தேவை என்று தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநரும் மருத்துவருமான தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

  இது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், “ஒரு மருத்துவர் என்ற முறையில் கூறுகிறேன், நீட் தேர்வு அவசியம் தேவை; மிகப்பெரிய மருத்துவக் கல்லூரி உரிமையாளரின் மகளாக இருந்தாலும் கூட நீட் தேர்வில் வெற்றி பெற்றால்தான் மருத்துவராக ஆக முடியும்” என கூறியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், நீட் தேர்வின் தாக்கம் தொடர்பாக ஏ.கே. ராஜன் குழு தமிழக அரசிடம் தாக்கல் செய்த அறிக்கையில், வயதில் மூத்த மாணவர்களுக்கு நீட் தேர்வு சாதகமாக அமைந்திருப்பதாக குறிப்பிடப்பபட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

  முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கே பெரும்பாலும் நீட் தேர்வு சாதகமாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நகரப்பகுதிகளில் உள்ள மாணவர்கள், தனியாக பயிற்சி வகுப்பு செல்லும் வசதி பெற்றிருப்பதே அதற்குக் காரணம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

  மேலும், தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் சராசரி வயது அதிகரித்து வருவதையும் ராஜன் குழு சுட்டிக்காட்டியுள்ளது. 2014-15 கல்வி ஆண்டில் மொத்த மாணவர் சேர்க்கையில் பூஜ்ஜியம் புள்ளி ஒன்று மூன்று சதவீதத்தினரே 20 வயதை எட்டியவர்களாக இருந்தனர். அப்போது மருத்துவப் படிப்பில் சேர்ந்த 17 வயதினரின் எண்ணிக்கை 56 புள்ளி ஒன்று நான்காக இருந்தது.

  ஆனால், 2020 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த 17 வயது மாணவர்கள் எண்ணிக்கை, வெறும் 11 சதவீதமாக வீழ்ச்சி அடைந்திருப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேநேரத்தில் 20 வயதை எட்டிய மாணவர்களின் எண்ணிக்கை 8 புள்ளி 48 ஆக அதிகரித்துள்ளது. இதுபோல் 2014-ல் 1.29 சதவீதமாக இருந்த 19 வயது மாணவர்களுக்கான சேர்க்கை விகிதம், 2020-ல் 37 சதவீதமாக அதிகரித்துள்ளதையும் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

  Must Read : தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது... 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் திங்கட் கிழமை வெளியாகிறதா?

  மருத்துவப் படிப்பில் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என்ற நோக்கில் மீண்டும், மீண்டும் நீட் தேர்வு எழுதி சேர்க்கை கிடைக்கப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 2014-ல் 0.3 சதவீதமாக இருந்த நிலை மாறி, 2020ஆம் ஆண்டில் 70 சதவீதமாக அதிகரித்திருப்பதையும் முதலமைச்சரிடம் ராஜன் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

  Published by:Suresh V
  First published:

  Tags: Neet, Neet Exam, Tamilisai Soundararajan