ஹோம் /நியூஸ் /கல்வி /

1 முதல் 9ம் வகுப்பு வரை கட்டாயம் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

1 முதல் 9ம் வகுப்பு வரை கட்டாயம் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

மாணவர்கள்

மாணவர்கள்

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறுவது பள்ளிக்கல்வித்துறையின் விளக்கத்தைத் தொடர்ந்து உறுதியாகி இருக்கின்றது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை கட்டாயம் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

கொரோனோ காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கி அரசு உத்தரவிட்டது. தற்போது நோய்த்தொற்று குறைந்திருக்கும் நிலையில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என அம்மாநில அரசு அறிவித்ததைத் தொடர்ந்து தமிழகத்திலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறுமா, அல்லது கடந்த 2 ஆண்டுகளைப் போல அனைவருக்கும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை கட்டாயம் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

Also read... 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேரம் குறைப்பு

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைய செய்யப்படுவார்கள். இருப்பினும்  வழக்கமாக ஆண்டு இறுதித் தேர்வுகள் என்பது நடத்தப்படும். இந்த ஆண்டு 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறுவது பள்ளிக்கல்வித்துறையின் விளக்கத்தைத் தொடர்ந்து உறுதியாகி இருக்கின்றது.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Exam, Tn schools