அங்கன்வாடிகளில் எல்கேஜி, யுகேஜி- ஓபிஎஸ் கேள்வி எழுப்பிய நிலையில் தொடக்க கல்வி இயக்ககம் விளக்கம்
அங்கன்வாடிகளில் எல்கேஜி, யுகேஜி- ஓபிஎஸ் கேள்வி எழுப்பிய நிலையில் தொடக்க கல்வி இயக்ககம் விளக்கம்
அங்கன்வாடி மையம்
அங்கன்வாடிகளில் LKG, UKG வகுப்புகளில் யார் பாடம் நடத்துவார் என்று ஓ.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பி இருந்த நிலையில் தொடக்க கல்வி இயக்கம் புதிய விளக்கத்தை அளித்துள்ளது.
அங்கன்வாடிகளில் LKG, UKG வகுப்புகள் மூடப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அது குறித்து தொடக்க கல்வி இயக்ககம் புதிய விளக்கத்தை அளித்துள்ளது.
அதில் 2018-ல் அங்கன்வாடி மையங்களில் பரிட்சார்த்த முறையில் LKG, UKG வகுப்புகள் தொடங்கப்பட்ட போது, இடைநிலை ஆசிரியர்கள் LKG, UKGக்கு ஒரே ஆசிரியர் கையாள பணியமர்த்தப்பட்டதாகவும் இடைநிலை ஆசிரியர்கள் மழலையர் வகுப்பு குழந்தைகளை கையாள்வதில் சிக்கல் நீடித்ததாகவும், செம்மையாக கையாள இயலாத சூழல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
மழலையர் பள்ளிகளுக்கு மாற்றப்பட்டதால், இடைநிலை ஆசிரியர்களுக்கான தேவை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டதாகவும் இதை கருத்தில்கொண்டு அங்கன்வாடி உதவியாளர்கள் மூலமே தற்காலிக கற்றல் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டதாக தொடக்கக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
அங்கன்வாடிகளில் LKG, UKG வகுப்புகளில் யார் பாடம் நடத்துவார் என்று ஓபிஎஸ் கேள்வி எழுப்பி இருந்த நிலையில் இந்த விளக்கத்தை DPI அளித்துள்ளது.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.