இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீட்டுக்குள் நடக்கும் இந்த வகையான வன்முறை சம்பவங்களால் ஆண்டுதோறும் 20,000க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இந்த, குடும்ப வன்முறைக்கு வரதட்சணை கொடுமை மூலக் காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், செவிலியர் மாணவர்களுக்கான சமூகவியல் புத்தகத்தில் வரதட்சணையை நியாயப்படுத்தும் விதமாக சில கருத்துக்கள் பதிவு இடம்பெற்றுள்ளன . டி. க இந்திராணி இந்த புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.
வரதட்சணை நன்மைகள் என்ற தலைப்பின் கீழ்:
குடும்பங்களை கட்டமைப்பதில் வரதட்சனை முக்கிய பங்கு வகிக்கிறது. பெற்றோர்கள் கல்யாணத்திற்காக மற்றொருவருக்கு தொலைக்காட்சி, குளிர்சாதன பெட்டி, மின் விசிறி, துணிகள் மற்றும் வாகனங்கள் வழங்குகிறார்.
வரதட்சணை மூலம் பெற்றோரின் சொத்தில் இருந்து சம பங்கினை மகள்கள் பெற முடிகிறது.
வரதட்சணை மூலம் பெண்கள் கல்வி அதிகரிக்கிறது. நன்கு படித்து, உத்தியோகம் செல்லும் பெண்கள் அதிக வரதட்சணை கொடுக்க வேண்டிய தேவை குறைகிறது. இதனால், அநேக பெற்றோர்கள் தங்கள் மகள்களை படிக்க வைக்க முன்வந்துள்ளனர். எனவே, பெண் கல்வியை வரதட்சணை மறைமுகமாக ஊக்குவிக்கிறது.
அசிங்கமான தோற்றம் கொண்ட பெண்கள் கூட அதிக வரதட்சணை கொடுத்து அழகான ஒருவரை கல்யாணம் செய்து கொள்ளலாம்.
வரதட்சணை தொடர்பான இந்த பதிவு சமூக ஊடங்களில் பேசும் பொருளானது.
மோசமான கருத்தை விதைக்கும் இத்தகையை கருத்தை பாடங்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கத் தொடங்கின.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்:
தேசிய குற்ற ஆவணக் காப்பகத் தகவல் படி, வரதட்சணை தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 2018ம் ஆண்டில் 12,826 வழக்குகளும், 2019ம் ஆண்டில் 13,307 வழக்குகளும், 2020ம் ஆண்டில் 10,366 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2020ல் ஒட்டுமொத்த தற்கொலை எண்ணிகையில் குடும்ப வன்முறை காரணமாக 33% பேர் தற்கொலை செய்துள்ளனர்
2016,17,18 ஆகிய மூன்று ஆண்டுகளில் வரதட்சணை மரணங்கள் தொடர்பாக முறையே 7167, 7141 மற்றும் 6966 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் வரதட்சனை வாங்கினாலோ, கொடுத்தாலோ, கொடுக்கத் தூண்டினாலோ அவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனையும், 5000 ருபாய் அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.