தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது: உயர்நீதிமன்றம்

ஜூன் மாதம் நடைபெறவுள்ள தகுதி தேர்வில் தேர்ச்சியடையாத 1500 ஆசிரியர்களை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது: உயர்நீதிமன்றம்
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: May 16, 2019, 4:29 PM IST
  • Share this:
தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


தகுதி தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒன்பது ஆண்டுகளில் இது வரை 18 முறை தேர்வுகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆனால் இதுவரை மூன்று முறை மட்டுமே தமிழகத்தில் தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் முறையிட்டுள்ள மனுதாரர்கள், தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து தெளிவான அரசாணை வெளியிடப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்

மேலும், தேசிய தகுதி தேர்வின் அடிப்படையில் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் கார்த்திக்கேயன், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என உத்தரவிட்டனர்.

மேலும், ஜூன் மாதம் நடைபெறவுள்ள தகுதி தேர்வில் தேர்ச்சியடையாத 1500 ஆசிரியர்களை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.Also see... EXCLUSIVE : அரசு பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்

Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்