’50-65% வரை தேர்ச்சி பெறுகிறார்கள்’ - SAMKALP சிவில் சர்வீஸ் மாணவர்களின் நேர்காணல் முறையை ஆய்வுசெய்யுமாறு திமுக எம்.பி., கோரிக்கை

180 பேர் ஐஎஸ் பணியிடங்களையும் 150 பேர் வெளியுறவு துறை பணியிடங்களையும் (ifs) 24 பேர் ஐபிஎஸ் பணியிடங்களையும் தேர்வு செய்துள்ளனர்.

’50-65% வரை தேர்ச்சி பெறுகிறார்கள்’ -  SAMKALP சிவில் சர்வீஸ் மாணவர்களின் நேர்காணல் முறையை ஆய்வுசெய்யுமாறு திமுக எம்.பி., கோரிக்கை
செந்தில்குமார் எம்.பி.,
  • News18 Tamil
  • Last Updated: September 19, 2020, 10:31 AM IST
  • Share this:
ஆர்.எஸ்.எஸ், பிஜேபி-ன்புலத்தில் இயங்கும் சம்கல்ஃப் (SAMKALP) சிவில் சர்வீஸ் பயிற்சி நிறுவனத்தில் பயின்றவர்களில் 50-65% பேர் வருடத்திற்கு தேர்ச்சி பெறுகிறார்கள், தேர்ச்சி பெற்றவர்களின் நேர்காணல் செயல்முறை ஆராயப்பட வேண்டும் என திமுக எம்.பி.செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐ.எப்.எஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் யுபிஎஸ்சி தேர்வுகளை நடத்துகிறது அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வும் செப்டம்பர் மாதத்தில் பிரதான தேர்வும் அதில் தேர்வானவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் நேர்முகத்தேர்வு நடைபெற்றது இடையில் கொரோனா பரவல் காரணமாக நேர்முகத்தேர்வுகள் நடைபெறவில்லை.



இந்த நிலையில் கடந்த வாரம் நேர்முகத்தேர்வு நடத்தப்படாத  நபர்களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் நாலாம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.


சம்கல்ப் தேர்ச்சி விகிதம்


அதன்படி இறுதித்தேர்வில் 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இவர்களுள் 180 பேர் ஐஎஸ் பணியிடங்களையும் 150 பேர் வெளியுறவு துறை பணியிடங்களையும் (ifs) 24 பேர் ஐபிஎஸ் பணியிடங்களையும் தேர்வு செய்துள்ளனர்.

இதில் 50 முதல் 65 சதவீதம் வரை அரசு மற்றும் பிஜேபிக்கு பின்புலத்தில் இயங்கும் சம்கல்ஃப் (SAMKALP) பயிற்சி நிறுவனத்தில் பயின்றவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள் என்றும் அவர்களின் நேர்காணல் தேர்வு முறைகளை ஆராய வேண்டும் எனவும் தர்மபுரி நாடாளுமன்ற திமுக உறுப்பினர் டாக்டர்.செந்தில்குமார் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்
First published: September 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading