Home /News /education /

கல்வி உதவித் தொகை நுழைவுத் தேர்வில் இந்தியை திணிக்க முயற்சி: கனிமொழி குற்றச்சாட்டு

கல்வி உதவித் தொகை நுழைவுத் தேர்வில் இந்தியை திணிக்க முயற்சி: கனிமொழி குற்றச்சாட்டு

திமுக எம்பி கனிமொழி

திமுக எம்பி கனிமொழி

அரசமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் பட்டியிலிடப்பட்ட 22 மொழிகளிலும் தேர்வு நடத்தி சமூக நீதியை உறுதிசெய்ய வேண்டும் - திமுக எம்பி கனிமொழி

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    PM YASASVI ENTRANCE TEST: சமூகம் மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பினர் (ஓபிசி)/ சீர்மரபினர் (டிஎண்டி), பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (ஈபிசி)  மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கான உதவித் தொகை நுழைவுத் தேர்வை (பிஎம் – யாஸஸ்வி/PM-YASASVI)  8வது அட்டவணையில் பட்டியிலிடப்பட்ட 22 மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

    சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில், ஓபிசி/டிஎண்டி மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பிலிருந்து 12 வரை கல்விக்கான (Pre Matric மற்றும் Post Matric) உதவித் தொகை திட்டம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்ளையும் உள்ளடக்கும் விதமாக கடந்த 2021ம் ஆண்டு  இத்திட்டம் பிஎம் – இதன் யாஸஸ்வி என்ற பெயரிலில் மறுசீரமைக்கப்பட்டது. பிஎம் – யாஸஸ்வி என்ற முதன்மைத் திட்டத்தின் கீழ் பல்வேறு துணைத் திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன.

    இதில், புகழ்பெற்ற பள்ளிகளில் சேர்க்கை பெறும் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான உதவி துணை  திட்டத்திற்கு, தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யாஸஸ்வி (YASASVI Entrance Test)  என்ற தேசிய நுழைவுத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு முன்னதாக அறிவித்தது. 

    அந்த வகையில், 2022 கல்வியாண்டிற்கான தேசிய நுழைவத் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தொடங்கப்பட்டது. நுழைவுத் தேர்வு வரும் 11ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் மட்டும் போட்டி தேர்வை நடத்துவது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    இந்தியை மறைமுகமாகத் திணிக்கும் பாரபட்சமான முறையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்த எம்.பி கனிமொழி, "ஒன்றிய அரசின் சமூக நீதி அமைச்சகத்தின் சார்பில், மேல்நிலை வகுப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் சமூக பள்ளி மாணவ/ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

     



    இத்திட்டத்திற்காக தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே நடத்தப்படுகிறது. பல்வேறு மொழிகளின் பிறப்பிடமான இந்தியாவில், இந்தியை மறைமுகமாகத் திணிக்கும் ஒன்றிய அரசு இந்த பாரபட்சமான முறையை விடுத்து, அரசமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் பட்டியிலிடப்பட்ட 22 மொழிகளிலும் தேர்வு நடத்தி சமூக நீதியை உறுதிசெய்ய வேண்டும்" என்று தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    இதையும் வாசிக்கதமிழ்நாடு எஸ்சி, எஸ்டி ஆணையத்திற்குரிய அதிகாரிகளை உடனடியாக நியமிக்க வேண்டும் - தொல்.திருமாவளவன் கோரிக்கை

    உதவித் தொகை:  பிஎம் – யாஸஸ்வி புகழ்பெற்ற பள்ளிகள் உதவித் தொகை திட்டத்தின் கீழ், 9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 75 ஆயிரம் ரூபாயும், 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 1,25,000 ரூபாயும் வழங்கப்படும்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Kanimozhi, Scholarship

    அடுத்த செய்தி