இது தமிழக அரசா அல்லது சமஸ்கிருத சர்க்காரா? ஸ்டாலின் விமர்சனம்

News18 Tamil
Updated: July 26, 2019, 10:01 PM IST
இது தமிழக அரசா அல்லது சமஸ்கிருத சர்க்காரா? ஸ்டாலின் விமர்சனம்
மு.க.ஸ்டாலின்
News18 Tamil
Updated: July 26, 2019, 10:01 PM IST
தமிழை விட சமஸ்கிருத மொழியே தொன்மையான மொழி என 12ஆம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பதிவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள 12ஆம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் கி.மு. 300 ஆண்டுகள் பழமையான மொழி தமிழ் என்றும், கி.மு. 2000 ஆண்டுகள் பழமையானது சமஸ்கிருதம் என்றும் அச்சடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


இது தொடர்பாக ட்வீட் போட்டுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ” எப்படிச் சகிப்பது இக்கொடுமையை? தமிழ் 2300 ஆண்டுகள் தான் பழமை வாய்ந்ததாம். ஆனால், சமஸ்கிருதமோ 4000 ஆண்டுகள் பழமையானதாம். இப்படித்தான் சொல்கிறது தமிழக அரசின் 12-ஆம் வகுப்பு பாடப்புத்தகம். காவியை பூசிக் கொள்பவர்கள் ஆட்சியில் இதுதானே நடக்கும்? இது தமிழக அரசா அல்லது சமஸ்கிருத சர்க்காரா?” என்று குறிப்பிட்டுள்ளார்.

First published: July 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...