ஆன்லைன் கல்வி இரட்டிப்பு பாதிப்பை ஏற்படுத்தும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
ஆன்லைன் கல்வி முறை வகுப்பறைக் கல்விக்கு மாற்று இல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
- News18 Tamil
- Last Updated: June 17, 2020, 2:42 PM IST
திமுக தலைவர் ஸ்டாலின் இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், இணையவழி உட்கட்டமைப்பு முழுமையாக இல்லாத தமிழகத்தில் ஆன்லைன் கல்வி ஆபத்தானது எனக் குறிப்பிட்டுள்ளார். கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை எளிய மாணவர்கள் ஆன்லைன் கல்வியால் பாதிக்கப்படுவார்கள் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கல்வித் தொலைக்காட்சி இணைப்பு இதுவரை ஒரு லட்சம் பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், அந்தத் தொலைக்காட்சி அனைத்து இல்லங்களிலும் தெரியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பணமதிப்பிழப்பு பாதிப்பை விட ஆன்லைன் கல்வி, மாணவர்களுக்கு இரட்டிப்பு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் நீண்ட நேரம் தொலைக்காட்சி, செல்போன் பார்ப்பதால் மாணவர்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆன்லைன் கல்வி மூலம் பாகுபாட்டை உண்டாக்கி மாணவர் சமுதாயத்தின் எதிர்காலத்தை பாழடித்து விட வேண்டாம் என எச்சரித்துள்ள ஸ்டாலின், நிழல் நிஜமாகிவிடாது என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க...தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்