• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் - மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் - மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

  • Share this:
    மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்து மேடை நிகழ்ச்சி காணொளி வாயிலாக நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, பேராசிரியர் கருணானந்தம் உள்ளிட்ட கல்வியாளர்கள் பங்கேற்று தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

    இதையடுத்து பேசிய மு.க.ஸ்டாலின், கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகத்தை, புதிய கல்விக் கொள்கை என்ற மதயானை புகுந்து நாசம் செய்வதாக விமர்சித்தார். கல்விக் கொள்கை தொடர்பாக உண்மைக்கு புறம்பான கருத்துகளை பிரதமர் மோடி கூறியுள்ளதாக குற்றம்சாட்டிய ஸ்டாலின், இந்த கல்வி முறையை அமல்படுத்தினால், இன்னும் 10 ஆண்டுகளில் சிலருக்கு மட்டுமே கல்வி சொந்தம் என்றாகி விடும் எனவும் குற்றம்சாட்டினார்.



    மேலும், அனைத்துக்கட்சிகளும் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த மு.க.ஸ்டாலின், இதேபோல, ஆளும் அதிமுக அரசும் எதிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: