பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
பள்ளிகளில் அதிகரித்து வரும் பாலியல் குற்றச்சாட்டுகள், மாணவிகள் தற்கொலை, பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழப்பு என பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை துவங்கி நடந்து வருகிறது.
பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் தலைமையில் நடந்து வரும் கூட்டத்தில் கல்வித்துறை சார்ந்த இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
Also read... அரசு பள்ளி மாணவர்களுக்கு JEE, NEET உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி!
குழந்தைகள் நல ஆர்வலர்கள் தேவநேயன், ஆண்ட்ரூஸ் உள்ளிட்ட சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டுள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
மாவட்ட வாரியாக பாலியல் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு இருக்கிறதா, பள்ளி வாரியாக பாதுகாப்பற்ற கட்டடங்கள் இடிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையர் மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Education department