ஹோம் /நியூஸ் /கல்வி /

தொலைதூரக் கல்வி மூலம் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் இல்லை - உயர்நீதிமன்றம்

தொலைதூரக் கல்வி மூலம் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் இல்லை - உயர்நீதிமன்றம்

காட்சிப் படம்

காட்சிப் படம்

தொலைதூரக் கல்வி மூலம் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுந்தவர்களோ, தகுதியானவர்களோ அல்ல - சென்னை உயர்நீதிமன்றம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |

தொலைதூரக் கல்வி மூலம் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பதவி உயர்வு கோரி நித்யா என்ற ஆசிரியர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஆசிரியர்களாக உள்ள பெரும்பாலானோர் கல்லூரி சென்று படிக்காதவர்களாக இருப்பது துரதிருஷ்டவசமானது என நீதிபதி தெரிவித்தார்.

தொலைதூரக் கல்வி மூலம் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுந்தவர்களோ, தகுதியானவர்களோ அல்ல என கூறிய அவர், கல்வி நிலையங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் எனவும், ஆசிரியர் நியமன நடைமுறையை 3 மாதங்களில் மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறைக்கு உத்தரவிட்டார்.

இதையும் வாசிக்க:  TNPSC Group 4 Exam: தட்டச்சர்/சுருக்கெழுத்தர் சான்றிதழ் ஏன் முக்கியமானது?

இதையடுத்து, கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களை மட்டும் ஆசிரியர்களாக நியமிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தொடக்க கல்வி இயக்குனர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

First published:

Tags: Chennai High court