ஆன்லைன் வழி மற்றும் தொலைதூர முறையில் கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடியாக உயர்ந்துள்ளது.
நாட்டில் ஆன்லைன் வழி மற்றும் தொலைதூர முறையில் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை காட்டிலும் மிக அதிக எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது. அதன்படி இணைய வழி கல்வி 170 சதவீதமும் தொலைதூர கல்வி முறை 42 சதவீதம் உயர்ந்துள்ளது.
அந்த வகையில் இணைய வழி கல்வி முறையில் 2020-21ம் ஆண்டு 25.905 பேர் பயின்று வந்த நிலையில், இந்த எண்ணிக்கை 2021-2022ம் ஆண்டில் 70 ஆயிரத்து 23 நபர்களாக அதிகரித்துள்ளது.
அதேபோல இணைய வழி மற்றும் தொலைதூர அடிப்படையில் கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகளவு உயர்ந்துள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழுவின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த அடிப்படையில் தொலைதூர அடிப்படையில் கடந்த 2020 மற்றும் 21 ஆம் கல்வியாண்டில் 14.6 லட்சம் மாணவர்கள் பயின்று வந்த நிலையில் 2021-2022 ம் ஆண்டு அந்த எண்ணிக்கை 20.3 லட்சமாக அதிகரித்துள்ளது.
இணையவழி கல்வியில் கர்நாடகா மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய ஐந்து மாநிலங்களும் தொலைதூரக் கல்வி முறையில் டெல்லி, மகராஷ்ட்டிரா தமிழ்நாடு, குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் முன்னிலை இடத்திலும் உள்ளன.
அதிகபட்சமாக இளநிலை படிப்புகளில் பி.பி.ஏ படிப்பில் 13 ஆயிரத்து 764 பேரும் முதுகலை பிரிவில் எம்.பி.ஏ படிப்புகளில் 28,956 பேரும் பயின்று வருகின்றனர்.
இந்தியாவில் 66 உயர்கல்வி நிறுவனங்களில் 136 இளநிலை படிப்புகளும் 236 முதுகலை படிப்புகளும் ஆன்லைன் வழியில் கற்பிக்கப்படுகின்றன.
கொரோனா காலகட்டத்திற்கு பிறகே இணைய வழி மற்றும் தொலைதூர கல்வி முறை அடிப்படையில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Education, Education department