தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், கல்லூரிக் கல்வி இயக்ககம்,
சென்னை கட்டுப்பாட்டில் இயங்கும் எம்.பி.ஏ./எம்.சி.ஏ. முதுநிலை பட்டப்படிப்பு (MBA/MCA) சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ், 11 அரசு பொறியியல் கல்லூரிகள், 51 அரசு பல்வகை தொழிநுட்பக் கல்லூரிகள், 20 அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், 959 சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 1082 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ், தற்போது 907 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 11 உடற்கல்வி கல்லூரிகள். நான்கு கீழ்த்திசை கல்லூரிகள் (Oriental), இரண்டு சமூகப்பணி பள்ளிகள் மற்றும் 649 கல்வியியல் கல்லூரிகள் என மொத்தம் 1.573 கல்லூரிகள்
செயல்பட்டு வருகின்றன.
2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த மாணாக்கர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இதையும் வாசிக்க: தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் தொழிற் பழகுனர் மேளா: 5ம் வகுப்பு தேர்ச்சி போதும்
1)
விண்ணப்பிக்கும் முறை: www.gct.ac.in / www-tnmbamca.com என்ற இணையதளங்கள் வாயிலாக தேவையான சான்றுகளுடன் இணையதளம்
மூலமாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ. முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யும் நாள்
துவங்கும் நாள்: 11.07 2022;
முடிவுறும் நாள் 05.08.2022
பதிவுக் கட்டணம்: பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர் Debit Card/Credit Card/Net Banking இணையதளம் வாயிலாக மட்டுமே செலுத்தலாம்.
இதையும் வாசிக்க: NEET (UG) Admit Card: நீட் தேர்வுக்கான அட்மிட் கார்டு இன்று வெளியாகிறது
இந்த கல்வியாண்டில் எம்பிஏ/எம்சிஏ முதுநிலை பட்டப்படிப்பு கலந்தாய்வு நடைமுறைகளான விண்ணப்பப் பதிவு, சான்றிதழ் பதியேற்றம், சன்றிதழ் சரிபார்ப்பு, கல்லூரி தேர்ந்தெடுத்தல், தற்காலிக மற்றும் இடைக்கால ஒதுக்கீட்டு ஆணை ஆகியவை அனைத்தும் இணையதளம் வாயிலாக மட்டுமே நடைபெறும்.
5) மேலும் விவரங்கள் அறிய www.gct.ac.in / www.tn-mbamca.com இணையதள முகவரியில் “INFORMATION AND INSTRUCTIONS TO CANDIDATES" பக்கத்தில் பார்க்கவும்.
தொடர்பு எண்.0422/2451100
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.