Home /News /education /

பகுதி நேர பிஇ.,பி.டெக் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பகுதி நேர பிஇ.,பி.டெக் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

காட்சிப் படம்

காட்சிப் படம்

மேலும் விவரங்களை www.pthe-tnea.com என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

    Part time B.E. / B.Tech Degree Courses: தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியற் கல்லூரிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கு தகுதி வாய்ந்த பட்டயப்படிப்பு முடித்து,பணிபுரியும் விண்ணப்பதாரர்களுக்கு பகுதி நேர பி.இ. பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல்  வரவேற்கப்படுகின்றன.

    பங்கேற்கும் கல்லூரிகள்: 

    அரசினர் பொறியியற் கல்லூரி. கோயம்புத்தூர் - 641073

    அரசினர் பொறியியற் கல்லூரி, சேலம் - 636011

    அரசினர் பொறியியற் கல்லூரி, திருநெல்வேலி - 627007

    அழகப்பசெட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி,காரைக்குடி - 630 004

    தந்தை பெரியார் அரசினர் பொறியியற் கல்லூரி-  வேலூர் 632 002

    அரசினர் பொறியியற் கல்லூரி,பர்கூர் - 635104

    கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி,  கோயம்புத்தார் - 641 014

    தியாகராஜர் பொறியியற் கல்லூரி, மதுரை - 625 015

    தகுதி: விண்ணப்பதாரர் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளன்று பட்டயப்படிப்பு முடித்து, இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

    மேலும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணிபுரிகிறவராகவோ அல்லது இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்திருத்தவராகவோ இருக்க வேண்டும்.

    இதையும் வாசிக்க:  பொறியியல் படிப்புகளின் இன்றைய நிலை என்ன?

    விண்ணப்பிக்கும் முறை:  விண்ணப்பதாரர் www.ptbe-tnea.com என்ற இணையதள வாயிலாக மட்டுமே  விண்ணப்பிக்க முடியும்.

    விண்ணப்பப்படிவம் கிடைக்கும் நாள்:  ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யும் நாள்

    துவங்கும் நாள்: 04.07.2022

    முடிவுறும் நாள் : 03.08.2022

    பதிவுக் கட்டணம்: பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர் Debt Card/ Credit Card/Net Banking இணையதளம் வாயிலாக செலுத்தலாம்.   

    இதையும் வாசிக்க: சீருடைப் பணியாளர் நியமனம்: துணை ராணுவத்தினர் சிறப்பு இடஒதுக்கீடு கோர முடியாது- தமிழக அரசு

    விவரங்கள்:  இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தினை இணையதளம் வாயிலாக பதிவு செய்வதற்கு, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையத்தினை (TFC) பயன்படுத்திக்
    கொள்ளலாம்.  அனைத்து TFC மையங்களிலும்  போதிய அளவில்  கொரானா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த கல்வியாண்டில் பகுதிநேர பி.இ. பட்டப்படிப்பு கலந்தாய்வு இணையதளத்தின் வாயிலாக மட்டுமே நடைபெறும்.

    மேலும் விவரங்கள் அறிய www.pthe-tnea.com என்ற
    இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். தொடர்பு எண்: 0422-2590080. கைபேசி எண்: 9486977757.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Education, Engineering

    அடுத்த செய்தி