ஹோம் /நியூஸ் /கல்வி /

10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனிதேர்வர்கள் விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு

10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனிதேர்வர்கள் விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு

காட்சிப் படம்

காட்சிப் படம்

10ம் வகுப்பு பொதுத் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று ஓராண்டு இடைவெளியுடன் இருக்கும் மாணவர்கள் 11ம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.  

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வரும் கல்வியாண்டில் நடைபெறவுள்ள 10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு வரும் 26ம் தேதி முதல் தனித்தேர்வர்கள்  விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு:

2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித் தேர்வர்கள் (முதல் முறையாக நேரடி தனித் தேர்வராக பத்தாம் வகுப்பு தேர்வினை எழுத விரும்புவோர் மற்றும் 2012ஆம் ஆண்டுக்கு முன்னர் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தேர்வெழுதி தேர்ச்சி பெறாதோர்) விண்ணப்பிக்கலாம்.

இதையும் வாசிக்க: 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு - முழு விவரம்

12ம் வகுப்பு தனித்தேர்வர்கள்: 

ஏற்கனவே நேரடித் தனித்தேர்வராக 11ம் வகுப்புத்  தேர்விற்கு விண்ணப்பித்து வருகை புரியாத/தேர்ச்சி பெற்ற / தேர்ச்சி பெறாத தேர்வர்கள் அனைவரும், தற்போது 12ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

11ம் வகுப்பு தனித் தேர்வர்கள்: 

10ம் வகுப்பு பொதுத் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று ஓராண்டு இடைவெளியுடன் இருக்கும் மாணவர்கள் 11ம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

26.12.2022 (திங்கட் கிழமை) காலை 10.00 மணி முதல் 03.012023 (செவ்வாய்க்கிழமை) அன்று மாலை 5.00 மணி வரை   மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களுக்கு (Government Examinations Service Centres) நேரில் சென்று விண்ணப்பங்களை Online-ல் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு: 

11ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகள்   

10ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகள்

12ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகள்

First published:

Tags: SSLC