ஹோம் /நியூஸ் /கல்வி /

12ம் வகுப்பு பொதுத் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு

12ம் வகுப்பு பொதுத் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

12th Exam Hall ticket: நடப்பாண்டில், 12ம் வகுப்பு பொது தேர்வை 8 லட்சம் பேர் எழுதவுள்ளனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

12 ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்பட இருக்கிறது. நாளை பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத் துறை இணையதளத்தில் இருந்து மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு

நடப்பாண்டில், 12ம் வகுப்பு பொது தேர்வை 8 லட்சம் பேர் எழுதவுள்ளனர். அடுத்த மாதம் செய்முறை தேர்வு நடைபெற இருப்பதால் ஹால் டிக்கெட் வெளி யிடப்பட உள்ளது. பள்ளிகள் பதிவிறக்கம் செய்த பின் மாணவர்களுக்கு தேர்வுக்கு முன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக,  இந்த கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான கால அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அதன்படி, மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுகிறது.

First published:

Tags: 12th exam