முகப்பு /செய்தி /கல்வி / 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்டை நாளை பதிவிறக்கம் செய்யலாம் - தேர்வுத்துறை

10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்டை நாளை பதிவிறக்கம் செய்யலாம் - தேர்வுத்துறை

பொதுத்தேர்வு

பொதுத்தேர்வு

இது பற்றிய தகவல் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

  • Last Updated :

நாளை 22.04.2022 பிற்பகல் முதல் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அனுமதிச் சீட்டை (ஹால் டிக்கெட்) மாணவர்கள்  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

இது பற்றிய தகவல் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா நோய்த் தொற்று குறைந்துள்ளதால் தமிழகத்தில் இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நேரடி தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை முன்னதாக அறிவித்தது. அதன்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதியும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9ஆம் தேதியும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6ஆம் தேதியும் தொடங்குகிறது.

இதற்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள்  நாளை பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே, 10ம் வகுப்பு தனித்தேர்வுக்கான அனுமதிச் சீட்டை தனித்தேர்வர்கள் நேற்று (20 ஏப்ரல்) முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன்படி, தனித்தேர்வர்கள் தங்களது ஹால்டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

top videos
    First published:

    Tags: 10th Exam, 12th exam