Home /News /education /

பி.எட். பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை வழிகாட்டுதல்கள் வெளியீடு

பி.எட். பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை வழிகாட்டுதல்கள் வெளியீடு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பொருளியல், வணிகம், அரசியல் அறிவு ஆகிய பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்க முதுநிலைப் பட்டம்  பெற்றவர்கள் தகுதியானவர்கள்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளில்  உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

    தமிழ்/உருது, கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட 10 பாட நெறிகளுக்கு இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்



    அதேபோன்று, பொருளியல், வணிகம், அரசியல் அறிவு ஆகிய பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்க முதுநிலைப் பட்டம்  பெற்றவர்கள் தகுதியானவர்கள்.

    அனைத்து வகை கல்லூரிகளிலும், தமிழக அரசின் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்க்கை நடப்பட வேண்டும். இணையதளம் வாயிலாகவே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். பி.எட் பட்டப் படிப்பு சேர விரும்பும் பட்டியலினத்தவர்கள் 40% , மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 43%, பிற்படுத்தப்பட்டோர் 45%, பொதுப்பிரிவினர் 50% மதிப்பெண்களை இளங்கலை படிப்புகளில் பெற்றிருக்க வேண்டும். இணையான படிப்புகள் ( Equivalent Degree ) என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் UG அல்லது PG முடித்திருந்தாலும், அது தொடர்புடைய படிப்புகளில் பிஎட் பட்டப்படிப்பில் சேரலாம்.

    அரசு கல்வியியல் கல்லூரிகள், உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் சேர www.tngasaedu.in இணையதளத்தை அணுகலாம்.  தனியார் கல்லூரிகளில் சேர அந்தந்த கல்லூரிகளின் இணையதளத்தை அணுக வேண்டும்.  சான்றிதழ் சரிபார்ப்பின் போது அசல் சான்றிதழ்களை வைத்திருத்தல் அவசியம் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: School Teacher, Teacher Education, Teachers

    அடுத்த செய்தி