Home /News /education /

மருத்துவ கலந்தாய்வு: மாற்றுத்திறனாளி மாணவர்களை புண்படுத்தும் அறிவிப்பு நீக்கம்

மருத்துவ கலந்தாய்வு: மாற்றுத்திறனாளி மாணவர்களை புண்படுத்தும் அறிவிப்பு நீக்கம்

காட்சிப் படம்

காட்சிப் படம்

விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் மருத்துவக்கல்வி இயக்குனரால் நியமிக்கப்படும் சிறப்பு மருத்துவக் குழுவினரால் கலந்தாய்வில் பொழுது உறுதி செய்யப்படும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள்  தங்கள்  ஊனத்தின் தன்மையை பிரதிபலிக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யத் தேவையில்லை என்று மருத்துவ கல்வி இயக்ககம் தேர்வுகுழு தெரிவித்துளளது.

    முன்னதாக, தமிழ்நாடு அரசு மருத்துவ  கல்லூரிகளில் உள்ள இடங்கள்/ சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் நீட்  முதுநிலை படிப்பு/டிப்ளமோ/ முதுகலை அறுவை சிகிச்சை (எம்டிஎஸ்) படிப்புகளில் 2022- 23 கல்வியாண்டிற்கான  கலந்தாய்வு அறிவிப்பை மருத்துவ கல்வி இயக்ககம் தேர்வுகுழு  வெளியிட்டது. இதற்கான கலந்தாய்வு வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் தொடங்குகிறது.

    இதில், அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் 5 சதவீதம் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில்  விண்ணப்பப்படிவம் சமர்ப்பிக்கும் போது தங்கள் ஊனத்தின் தன்மையை பிரதிபலிக்கும் வகையில் சமீபத்திய முழு புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த சிறப்பு ஒதுக்கீடு கோரும் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் மருத்துவக்கல்வி இயக்குனரால் நியமிக்கப்படும் சிறப்பு மருத்துவக் குழுவினரால் கலந்தாய்வின் பொழுது உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, மாற்றுத்திறனாளிகளிடம் அவர்களின் ஊனத்தின் புகைப்படம் கேட்பது மனிதநேயமற்றது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது. மருத்துவ கல்வி இயக்ககத்தின் அறிவிப்புக்கு எதிராக டெல்லி பல்கலைகழக மருத்துவ கல்லூரி பேராசிரியர் சத்தேந்திர சிங் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி நல ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார்.

    இதையும் வாசிக்க: நீட் தேர்வு மையத்தில் மோசமாக நடத்தப்பட்ட பெண் தேர்வர்களுக்கு மற்றொரு வாய்ப்பு: என்டிஏ

    இந்நிலையில், மாற்றுத்திறனாளி வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள்  தங்கள்  ஊனத்தின் தன்மையை பிரதிபலிக்கும் புகைப்படத்தை பதவிவேற்றம் செய்ய சொல்லும் பிரிவு விண்ணப்ப அறிவிக்கையில் இருந்து நீக்கப்படுவதாக  மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

    மாற்றுத் திறனாளி மாணவர்கள் நிபந்தனைககள் பிரிவில் 4-வது நிபந்தனை நீக்கப்பட்டது.


    மாணவர்கள், மூன்று மாதங்களுக்குள் எடுத்த சமீபத்திய புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Neet, Neet Exam

    அடுத்த செய்தி