நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராவதில் சிரமம்... மாணவர்களை ஊக்குவிக்க பெற்றோரும், ஆசிரியர்களும் சிறப்பு கவனம் செலுத்த கல்வியாளர்கள் கோரிக்கை

பள்ளி மாணவிகள்

12-ம் வகுப்புக்கான நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டில் நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்செய்வது சிரமமாக இருக்கும் என்று மாணவர்களும், ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.

 • Share this:
  கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது 10 மாதங்களுக்குப் பிறகு, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில், 30 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. எனினும், பொதுத்தேர்வுக்கு தயாராவதிலேயே மாணவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் காரணமாக, நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராவதில் சிரமம் இருப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

  கொரோனா காலத்தில் மாணவர்கள் படிப்பதற்கு வாய்ப்பு குறைவாக இருந்ததால், நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராவதில் மிகவும் நெருக்கடி நிலவுவதாக ஆசிரியர்களும் குறிப்பிடுகின்றனர்.

  பாடங்கள் குறைக்கப்பட்டாலும், 60 முதல் 70 சதவீத பாடங்களை 2-3 மாதங்களில் கற்பிக்க வேண்டிய நிலை இருப்பதாக கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி குறிப்பிடுகிறார். மேலும், பொதுத்தேர்வுக்கும், நுழைவுத் தேர்வுக்கும் இடையே குறைவான காலமே இருக்க வாய்ப்பு இருப்பதால், அதற்கு தயார்படுத்திக் கொள்வது சிரமம் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

  மேலும் படிக்க... Petrol-Diesel Price | 90 ரூபாயை தொட்ட பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரம் என்ன?

  எனவே, மாணவர்களை ஊக்குவிக்க பெற்றோரும், ஆசிரியர்களும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: