Home /News /education /

பள்ளிப் பாடத் திட்டத்தில் யோகா-வை சேர்க்க வேண்டும்.. மத்தியக் கல்வி அமைச்சர்

பள்ளிப் பாடத் திட்டத்தில் யோகா-வை சேர்க்க வேண்டும்.. மத்தியக் கல்வி அமைச்சர்

மத்திய கல்வி அமைச்சர்

மத்திய கல்வி அமைச்சர்

பள்ளி, வட்டம், மாவட்டம் மற்றும் மாநில அளவுகளில் யோகா ஒலிம்பியாட் போட்டிகளை நடத்தவும் அறிவுறித்தினார்

    பள்ளிப் பாடத் திட்டத்தில் யோகாவை சேர்க்க வேண்டும் என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பரிந்துரைத்துள்ளார்.

    மத்திய கல்வி அமைச்சகமும், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலும் இணைந்து ஜூன் 18 முதல் 20-ஆம் தேதி வரை தேசிய யோகா ஒலிம்பியாட்-ஐ நடத்தி வருகின்றன.நேற்று, தேசிய யோகா ஒலிம்பியாட்- 2022 மற்றும் வினாடி வினா போட்டியை மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் பேசிய கல்வி அமைச்சர், "கொரோனா தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் இன்னல்களைப் போக்கவும், நெகிழ்தன்மையைக் கட்டமைக்கவும், மனித இனத்திற்கு யோகா பேருதவியாக இருந்து வருகிறது.தேசிய கல்வி கொள்கை 2020, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துகிறது" என்று தெரிவித்தார்.

    தேசிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு வரும் வேளையில், ஆரம்பகால குழந்தைப்பருவ பராமரிப்பு மற்றும் கல்வி முதல் 12-ஆம் வகுப்பு வரை யோகாவிற்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்  என்று பரிந்துரைத்தார். பள்ளி, வட்டம், மாவட்டம் மற்றும் மாநில அளவுகளில் யோகா ஒலிம்பியாட் போட்டிகளை நடத்தவும் அறிவுறித்தினார். இந்த ஆண்டு தேசிய யோகா ஒலிம்பியாட் நிகழ்ச்சியில், 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 600 மாணவர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.  
    Published by:Salanraj R
    First published:

    Tags: Yoga

    அடுத்த செய்தி