தாராவி தமிழ்வழிக் கல்வி மாணவர்களையும் தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்க வேண்டும் - மும்பைத் தமிழர்கள் கோரிக்கை

மும்பை பத்தாம் வகுப்பு தேர்வர்களான தமிழ் வழிக் கல்வி மாணவர்களையும் தமிழக அரசு தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கவேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாராவி தமிழ்வழிக் கல்வி மாணவர்களையும் தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்க வேண்டும் - மும்பைத் தமிழர்கள் கோரிக்கை
தாராவி (கோப்பு படம்)
  • Share this:
கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழக அரசு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. ஒட்டு மொத்த பத்தாம் வகுப்பு மாணவர்களின் மன உளைச்சலுக்கும் மருந்தாக இருந்த இந்த அரசாணை மஹாராஷ்ட்ர மாநிலத்தில் வாழும் தமிழ் மாணவர்களை மட்டும் விட்டு விடுவதாக இல்லை.

தமிழ் நாட்டிலேயே தமிழ் வழி கல்வி குறைந்து வரும் நிலையில் மஹாராஷ்ட்ர மாநிலம் மும்மை தாராவி மற்றும் அதன் சுற்றுபுறத்தில் வாழும் ஏழை தமிழ் மக்களுக்கு  ஒரு சில தமிழ் பள்ளிகள் தமிழக அரசு பாடத்திடத்தின் கீழ் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தி வருகின்றது.

200 மாணவர்களுக்கு முறையான வருகை பதிவு மற்றும் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளையும் பின்பற்றி வருகிறது. வேற்று மாநிலம் என்பதால் மாணவர்கள் தனித்தேர்வர்களாக எடுத்து கொண்டு தேர்வு நடத்தி வருகிறது தமிழக அரசு தேர்வு இயக்ககம்.


மார்ச் 27 -ஆம் தேதி தேர்வு எழுத வேண்டிய நிலையில் ஒன்றுக்கு இரண்டு முறை தேர்வுகள் தமிழக அரசால் ஒத்தி வைக்கப்பட்டு தற்போது தேர்வை முழுமையாக ரத்து செய்துள்ளது.

இது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஊடகங்கள் வாயிலாக தேர்வு ரத்து மற்றும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற மகிழ்ச்சியான செய்தி மும்பையில் தேர்வுக்காக காத்திருந்த மாணவர்களும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தனித்தேர்வர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் அதற்கான மாற்று தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.மும்பை தாராவியில் கொரோனாவின் கோரத்தாண்டவம் தலைவிரித்தாடிவரும் நிலையில் மராட்டிய அரசு தாராவியை கொரோனா சிவப்பு பகுதியாக அறிவித்து, பல புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. மும்பையில் கொரோனாவின் பிடி எப்போது தளர்வை ஏற்படுத்தும் என்று தெரியாத நிலையில் மும்பை மாணவர்களுக்கு தமிழக அரசு தேர்வை எப்போது நடத்த உள்ளது? மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும்? என்ற அச்சத்தில் மும்பையிலுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியதோடு தேர்வு எழுதும் மாணவர்களின் மனநிலையையும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.

எனவே தமிழக அரசு மும்பை தேர்வர்களுக்கும் தமிழக அரசின் அரசாணையின் படி பத்தாம் வகுப்பு மும்பை தமிழ் வழி மாணவர்களையும் தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்கவேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாராவி பகுதி தமிழர்கள் செயல்பட்டு வரும் மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக பேசிய ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், ”இங்கு கொரோனா சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு மக்கள் ஏற்கனவே பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். மாணவர்கள் கடும் மன உளைச்சலில் இருக்கிறார்கள். தமிழ் வழிக்கல்வி கற்கும் அவர்களையும் தமிழ்நாட்டு மாணவர்களைப் போலவே கருதி அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்காக ஆன்லைன் நினைவஞ்சலி கூட்டம் நடத்துகிறது இந்த பல்கலைக்கழகம்: என்ன காரணம்?
First published: June 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading